பல கோரிக்கைகளை முன்வைத்து, ரயில் சாரதிகள் இன்று செவ்வாய்க்கிழமை (29) நள்ளிரவு முதல் அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.
பல சந்தர்ப்பங்களில் தங்களது பிரச்சினைகள் குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்த போதிலும், இதுவரை நிரந்தர தீர்வு எதுவும் வழங்கப்படவில்லை என ரயில் சாரதிகள் தெரிவித்தனர்.
மேலும், இந்தப் பிரச்சினைகள் குறித்து நேற்று திங்கட்கிழமை ரயில்வே பொது மேலாளருடன் கலந்துரையாடியதாகவும்,
இதன்போதும் எம்மால் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை எட்ட முடியவில்லை என ரயில் இயந்திர பொறியாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சந்தன வியந்துவ தெரிவித்தார்.
48 மணிநேர அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட ரயில் சாரதிகள் தீர்மானம் பல கோரிக்கைகளை முன்வைத்து, ரயில் சாரதிகள் இன்று செவ்வாய்க்கிழமை (29) நள்ளிரவு முதல் அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.பல சந்தர்ப்பங்களில் தங்களது பிரச்சினைகள் குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்த போதிலும், இதுவரை நிரந்தர தீர்வு எதுவும் வழங்கப்படவில்லை என ரயில் சாரதிகள் தெரிவித்தனர்.மேலும், இந்தப் பிரச்சினைகள் குறித்து நேற்று திங்கட்கிழமை ரயில்வே பொது மேலாளருடன் கலந்துரையாடியதாகவும், இதன்போதும் எம்மால் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை எட்ட முடியவில்லை என ரயில் இயந்திர பொறியாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சந்தன வியந்துவ தெரிவித்தார்.