• May 16 2026

வனவாசலயில் ரயில் விபத்து - ஆணிகளைக் கழற்றிய சந்தேகத்தில் ஒருவர் கைது!

shanu / May 16th 2026, 5:08 pm
image

வனவாசல மற்றும் களனி ஆகிய நிலையங்களுக்கு இடையிலான ரயில் மார்க்கத்தில் இன்று (16) காலை ரயில் விபத்து இடம்பெற்ற இடத்தில் தண்டவாளத்தில் ஆணிகளைக் கழற்றியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பேலியகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இவர் கடுமையான போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையானவர் எனவும் தண்டவாளத்தில் கழற்றப்பட்ட ஆணிகளை ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு கொண்டு சென்ற நபர் இவரே என்பதும் பொலிஸார் நடத்திய ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 


குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


வனவாசலயில் ரயில் விபத்து - ஆணிகளைக் கழற்றிய சந்தேகத்தில் ஒருவர் கைது வனவாசல மற்றும் களனி ஆகிய நிலையங்களுக்கு இடையிலான ரயில் மார்க்கத்தில் இன்று (16) காலை ரயில் விபத்து இடம்பெற்ற இடத்தில் தண்டவாளத்தில் ஆணிகளைக் கழற்றியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பேலியகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இவர் கடுமையான போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையானவர் எனவும் தண்டவாளத்தில் கழற்றப்பட்ட ஆணிகளை ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு கொண்டு சென்ற நபர் இவரே என்பதும் பொலிஸார் நடத்திய ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement