• Oct 02 2026

யாழில் அதிர்ச்சி சம்பவம்; ஒரு வயது குழந்தைக்கு நேர்ந்த சோக முடிவு

Chithra / Oct 2nd 2026, 10:55 am
image


யாழ்ப்பாணம், அனலைதீவில் புட்டிப்பால் குடித்துவிட்டு உறங்கிய ஒரு வயது குழந்தை வாயிலும் மூக்கிலும் நுரை வந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.


அனலைதீவு 5ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த ஒரு வயது குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.


நேற்று (01) காலை குழந்தைக்கு தாயார் புட்டிப்பால் ஊட்டிவிட்டு உறங்க வைத்துள்ளார்.


இதனையடுத்து, சில மணிநேரங்களின் பின்னர் குழந்தையின் வாயிலும் மூக்கிலும் நுரை காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.


உடனடியாக குழந்தை அனலைதீவு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில்,

 அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


எனினும், குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.


குழந்தையின் சடலம் தொடர்பான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ. ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளார்.


உடற்கூற்று பரிசோதனைகளுக்காக குழந்தையின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.


குழந்தையின் உயிரிழப்புக்கான காரணம் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னரே தெரியவரும் என தெரிவிக்கப்படுகிறது.

யாழில் அதிர்ச்சி சம்பவம்; ஒரு வயது குழந்தைக்கு நேர்ந்த சோக முடிவு யாழ்ப்பாணம், அனலைதீவில் புட்டிப்பால் குடித்துவிட்டு உறங்கிய ஒரு வயது குழந்தை வாயிலும் மூக்கிலும் நுரை வந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.அனலைதீவு 5ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த ஒரு வயது குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.நேற்று (01) காலை குழந்தைக்கு தாயார் புட்டிப்பால் ஊட்டிவிட்டு உறங்க வைத்துள்ளார்.இதனையடுத்து, சில மணிநேரங்களின் பின்னர் குழந்தையின் வாயிலும் மூக்கிலும் நுரை காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.உடனடியாக குழந்தை அனலைதீவு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.எனினும், குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.குழந்தையின் சடலம் தொடர்பான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ. ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளார்.உடற்கூற்று பரிசோதனைகளுக்காக குழந்தையின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.குழந்தையின் உயிரிழப்புக்கான காரணம் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னரே தெரியவரும் என தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement