• May 16 2026

ஜனவரி இறுதிவரை கடவத்தை - பண்டாரவத்தை பகுதியில் போக்குவரத்து மட்டுப்பாடு

Aathira / Nov 3rd 2025, 7:00 pm
image

மத்திய அதிவேக நெடுஞ்சாலை கட்டுமானம் காரணமாக,  கொழும்பு - கண்டி பிரதான வீதி கடவத்தை - பண்டாரவத்தை பகுதிக்கு வாகனப்போக்குவரத்து அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் திகதி வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதில், பிரதானமாக இரண்டு கட்டங்களில் பாலம் அமைக்கப்படவுள்ளது.

முதல் கட்டத்தில், கொழும்பு நோக்கி செல்லும் வழித்தடங்களில் ஒன்று மூடப்படுகிறது. 

இரண்டாம் கட்டத்தில், கண்டி நோக்கி செல்லும் வழித்தடங்களில் ஒன்றை மூடவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இக்கட்டுமான பணிகளின் போது இரு திசையிலும் ஒரு வழித்தடம் மூடப்படுவதால், வீதியில் வாகன நெரிசல் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

இந்த முழுமையான கட்டுமானக் காலப்பகுதியிலும் வீதியில் வாகன நெரிசல் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக காவல்துறை எச்சரித்துள்ளது.

எனவே, கொழும்பு - கண்டி வீதியைப் பயன்படுத்தும் சாரதிகள், இயலுமானவரை கடவத்தை வெளிவட்ட வீதியைப் பயன்படுத்துமாறு காவல்துறை கோரிக்கை விடுத்துள்ளது.

ஜனவரி இறுதிவரை கடவத்தை - பண்டாரவத்தை பகுதியில் போக்குவரத்து மட்டுப்பாடு மத்திய அதிவேக நெடுஞ்சாலை கட்டுமானம் காரணமாக,  கொழும்பு - கண்டி பிரதான வீதி கடவத்தை - பண்டாரவத்தை பகுதிக்கு வாகனப்போக்குவரத்து அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் திகதி வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.இதில், பிரதானமாக இரண்டு கட்டங்களில் பாலம் அமைக்கப்படவுள்ளது.முதல் கட்டத்தில், கொழும்பு நோக்கி செல்லும் வழித்தடங்களில் ஒன்று மூடப்படுகிறது. இரண்டாம் கட்டத்தில், கண்டி நோக்கி செல்லும் வழித்தடங்களில் ஒன்றை மூடவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.இக்கட்டுமான பணிகளின் போது இரு திசையிலும் ஒரு வழித்தடம் மூடப்படுவதால், வீதியில் வாகன நெரிசல் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.இந்த முழுமையான கட்டுமானக் காலப்பகுதியிலும் வீதியில் வாகன நெரிசல் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக காவல்துறை எச்சரித்துள்ளது.எனவே, கொழும்பு - கண்டி வீதியைப் பயன்படுத்தும் சாரதிகள், இயலுமானவரை கடவத்தை வெளிவட்ட வீதியைப் பயன்படுத்துமாறு காவல்துறை கோரிக்கை விடுத்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement