• Aug 14 2026

லெபனானில் மீண்டும் பதற்றம்-இஸ்ரேலின் அதிரடி வேட்டை

Ziya / Aug 14th 2026, 2:50 pm
image

தெற்கு லெபனானில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், டயர் மாவட்டத்தில் இஸ்ரேலிய போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.


லெபனானின் தேசிய செய்தி நிறுவனத்தின் தகவலின்படி, டயர் மாவட்டத்தில் உள்ள அல்-மன்சூரி பகுதியில் அமைந்துள்ள பொது நிலப்பகுதியை இஸ்ரேலிய போர் விமானங்கள் குறிவைத்து தாக்கியுள்ளன.


இதனிடையே, பின்ட் ஜ்பெயில் மாவட்டத்தில் உள்ள ஹத்தாத்தா நகரிலும் தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அங்கு பீரங்கிக் குண்டு ஒன்று விழுந்ததுடன், நகரை நோக்கி இயந்திரத் துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டதாக லெபனான் தேசிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.


மேலும், இந்தச் சம்பவங்களுடன் இணைந்து இஸ்ரேலிய இராணுவத்தின் நடமாட்டமும் அப்பகுதியில் காணப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


தெற்கு லெபனானில் தொடர்ச்சியாக இடம்பெறும் தாக்குதல் சம்பவங்கள், அப்பகுதியில் நிலவும் பதற்றமான பாதுகாப்பு நிலைமை குறித்து மீண்டும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

லெபனானில் மீண்டும் பதற்றம்-இஸ்ரேலின் அதிரடி வேட்டை தெற்கு லெபனானில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், டயர் மாவட்டத்தில் இஸ்ரேலிய போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.லெபனானின் தேசிய செய்தி நிறுவனத்தின் தகவலின்படி, டயர் மாவட்டத்தில் உள்ள அல்-மன்சூரி பகுதியில் அமைந்துள்ள பொது நிலப்பகுதியை இஸ்ரேலிய போர் விமானங்கள் குறிவைத்து தாக்கியுள்ளன.இதனிடையே, பின்ட் ஜ்பெயில் மாவட்டத்தில் உள்ள ஹத்தாத்தா நகரிலும் தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அங்கு பீரங்கிக் குண்டு ஒன்று விழுந்ததுடன், நகரை நோக்கி இயந்திரத் துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டதாக லெபனான் தேசிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.மேலும், இந்தச் சம்பவங்களுடன் இணைந்து இஸ்ரேலிய இராணுவத்தின் நடமாட்டமும் அப்பகுதியில் காணப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.தெற்கு லெபனானில் தொடர்ச்சியாக இடம்பெறும் தாக்குதல் சம்பவங்கள், அப்பகுதியில் நிலவும் பதற்றமான பாதுகாப்பு நிலைமை குறித்து மீண்டும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement