• Dec 16 2025

வவுனியா பல்கலையில் உயிரிழந்த மாணவன்; சடலத்தின் உடற்கூற்று மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைப்பு!

shanuja / Nov 3rd 2025, 8:35 pm
image

வவுனியா பல்கலைக்கழகத்தில்  உயிரிழந்த மாணவனின் உடற்கூற்று மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக திடீர் மரண விசாரணை அதிகாரி லா.சுரேந்திரசேகரன் இன்று (03.11) தெரிவித்துள்ளார். 


வவுனியாப் பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்ப பீடத்தில் முதலாம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவர் ஒருவர்  நேற்றுமுன்தினம்  சடலமாக மீட்கப்பட்டார். 


அநுராதபுரம் ஜயசிறிபுர பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய மாணவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். 


கடந்த வெள்ளிக்கிழமை மாலை முதல் நள்ளிரவு வரை பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் மது விருந்துபசாரம் இடம்பெற்றுள்ளது. 


நள்ளிரவு 12 மணியளவில் குறித்த மாணவனை பிறிதொரு மாணவனின் விடுதியில் மாணவர்கள் கொண்டு சென்று விட்டுள்ளனர். 


சனிக்கிழமை காலை குறித்த மாணவன் எழுந்திருக்காத நிலையில் ஏனைய மாணவர்கள் குறித்த மாணவனை பூவரசன்குளம் வைத்தியசாலையில் அனுமதித்த போதும் மாணவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. 


மாணவன் உயிரிழந்தபோது, ​​அவரது உடலில் கணிசமான அளவு மதுபான செறிவு இருந்திருக்கலாம் எனச் சந்தேகிப்பதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர். 


இந்த நிலையிலேயே உயிரிழந்த மாணவனின் சடலத்தின் உடற்கூற்று மாதிரிகள்  பரிசோதனைக்காக கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 


 

இதற்கிடையே பல்கலைக்கழக மாணவர்களின் விருந்தொன்றில் சிரேஷ்ட மாணவர்கள் தனது சகோதரருக்கு பலவந்தமாக மதுபானம் வழங்கியதாகவும் தனது சகோதரனுக்கு வேறு எந்த நோயும் இருந்திருக்கவில்லை என்றும், பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் பகிடிவதை குறித்து பல தடவைகள் குடும்ப உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவித்ததாகவும் விசாரணையில் சகோதரி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா பல்கலையில் உயிரிழந்த மாணவன்; சடலத்தின் உடற்கூற்று மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைப்பு வவுனியா பல்கலைக்கழகத்தில்  உயிரிழந்த மாணவனின் உடற்கூற்று மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக திடீர் மரண விசாரணை அதிகாரி லா.சுரேந்திரசேகரன் இன்று (03.11) தெரிவித்துள்ளார். வவுனியாப் பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்ப பீடத்தில் முதலாம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவர் ஒருவர்  நேற்றுமுன்தினம்  சடலமாக மீட்கப்பட்டார். அநுராதபுரம் ஜயசிறிபுர பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய மாணவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். கடந்த வெள்ளிக்கிழமை மாலை முதல் நள்ளிரவு வரை பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் மது விருந்துபசாரம் இடம்பெற்றுள்ளது. நள்ளிரவு 12 மணியளவில் குறித்த மாணவனை பிறிதொரு மாணவனின் விடுதியில் மாணவர்கள் கொண்டு சென்று விட்டுள்ளனர். சனிக்கிழமை காலை குறித்த மாணவன் எழுந்திருக்காத நிலையில் ஏனைய மாணவர்கள் குறித்த மாணவனை பூவரசன்குளம் வைத்தியசாலையில் அனுமதித்த போதும் மாணவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. மாணவன் உயிரிழந்தபோது, ​​அவரது உடலில் கணிசமான அளவு மதுபான செறிவு இருந்திருக்கலாம் எனச் சந்தேகிப்பதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர். இந்த நிலையிலேயே உயிரிழந்த மாணவனின் சடலத்தின் உடற்கூற்று மாதிரிகள்  பரிசோதனைக்காக கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  இதற்கிடையே பல்கலைக்கழக மாணவர்களின் விருந்தொன்றில் சிரேஷ்ட மாணவர்கள் தனது சகோதரருக்கு பலவந்தமாக மதுபானம் வழங்கியதாகவும் தனது சகோதரனுக்கு வேறு எந்த நோயும் இருந்திருக்கவில்லை என்றும், பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் பகிடிவதை குறித்து பல தடவைகள் குடும்ப உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவித்ததாகவும் விசாரணையில் சகோதரி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement