• Oct 02 2025

ஒலிபெருக்கிகளை பயன்படுத்தி வியாபாரம் செய்வது தடை; விதிமுறைகளை பின்பற்றுமாறு அறிவிப்பு

Chithra / Oct 2nd 2025, 9:04 am
image

 

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பிரதான வீதிகளில் கை ஒலிபெருக்கிகளை பயன்படுத்தி வியாபாரம் மேற்கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து தொடர்ந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதை தொடர்ந்து குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் இத்தகைய செயற்பாடுகள் மதஸ்தலங்களில் நடைபெறும் வணக்க வழிபாடுகள் மற்றும் பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவதுடன் பொதுமக்கள் அசௌகரியமடைவதாக கூறப்படுகிறது.

இதனடிப்படையில்  சம்மாந்துறை பிரதேச சபை மற்றும் சம்மாந்துறை பொலிஸ் நிலையம் ஆகியன இணைந்து  ஒலிபெருக்கிகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதனடிப்படையில் கடந்த மாதம் 23 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 11 ஒலி பெருக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பிரதேச சபை தகவல் மையம் குறிப்பிட்டுள்ளது.

எனவே இந்த நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்பதோடு  அனைத்து வியாபாரிகளும் சம்மாந்துறை பிரதேச சபையின் விதிமுறைகளை பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். 


ஒலிபெருக்கிகளை பயன்படுத்தி வியாபாரம் செய்வது தடை; விதிமுறைகளை பின்பற்றுமாறு அறிவிப்பு  அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பிரதான வீதிகளில் கை ஒலிபெருக்கிகளை பயன்படுத்தி வியாபாரம் மேற்கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது.இவ்விடயம் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து தொடர்ந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதை தொடர்ந்து குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.மேலும் இத்தகைய செயற்பாடுகள் மதஸ்தலங்களில் நடைபெறும் வணக்க வழிபாடுகள் மற்றும் பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவதுடன் பொதுமக்கள் அசௌகரியமடைவதாக கூறப்படுகிறது.இதனடிப்படையில்  சம்மாந்துறை பிரதேச சபை மற்றும் சம்மாந்துறை பொலிஸ் நிலையம் ஆகியன இணைந்து  ஒலிபெருக்கிகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.இதனடிப்படையில் கடந்த மாதம் 23 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 11 ஒலி பெருக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பிரதேச சபை தகவல் மையம் குறிப்பிட்டுள்ளது.எனவே இந்த நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்பதோடு  அனைத்து வியாபாரிகளும் சம்மாந்துறை பிரதேச சபையின் விதிமுறைகளை பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement