• Apr 20 2026

திருமலை நிலாவெளி கரையோரத்தை சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுப்பு...!

Ziya / Feb 17th 2024, 3:46 pm
image

திருகோணமலை மாவட்டத்தின் நிலாவெளி கரையோரத்தை சுத்தம் செய்யும் பணி இன்று (17)இடம் பெற்றது.

அதிகளவான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இப் பகுதிக்கு வருகை தரும் நிலையில் இன்று துப்பரவு பணி முன்னெடுக்கப்பட்டது.

துப்பரவு பணியினை,  நிலாவெளி பகுதியில் உள்ள ஹோட்டல்கள், படகு ஓட்டுநர்கள், முச்சக்கரவண்டி சங்கங்கள், கரையோர பாதுகாப்பு திணைக்களம்,பொலிஸார், ரைவிங் பாடசாலை , சுற்றுலாத் துறை சார் அமைப்புக்கள் என பல அமைப்புக்கள் இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்ததுடன் சுமார் 7கிலோ மீற்றர் தூரம் வரையான கரையோர பகுதிகள் சுத்தம் செய்யப்பட்டன.

இதன் மூலம் குறித்த பகுதியை பாதுகாக்கவும் பொலித்தீன் பாவனை உட்பட ஏனைய சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் கழிவுப் பொருட்கள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது.

இதில் சுமார் நூற்றுக்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.


திருமலை நிலாவெளி கரையோரத்தை சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுப்பு. திருகோணமலை மாவட்டத்தின் நிலாவெளி கரையோரத்தை சுத்தம் செய்யும் பணி இன்று (17)இடம் பெற்றது.அதிகளவான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இப் பகுதிக்கு வருகை தரும் நிலையில் இன்று துப்பரவு பணி முன்னெடுக்கப்பட்டது.துப்பரவு பணியினை,  நிலாவெளி பகுதியில் உள்ள ஹோட்டல்கள், படகு ஓட்டுநர்கள், முச்சக்கரவண்டி சங்கங்கள், கரையோர பாதுகாப்பு திணைக்களம்,பொலிஸார், ரைவிங் பாடசாலை , சுற்றுலாத் துறை சார் அமைப்புக்கள் என பல அமைப்புக்கள் இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்ததுடன் சுமார் 7கிலோ மீற்றர் தூரம் வரையான கரையோர பகுதிகள் சுத்தம் செய்யப்பட்டன. இதன் மூலம் குறித்த பகுதியை பாதுகாக்கவும் பொலித்தீன் பாவனை உட்பட ஏனைய சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் கழிவுப் பொருட்கள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது.இதில் சுமார் நூற்றுக்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement