டிக்டொக் சமூக ஊடகத்தின் மூலம் உருவான நட்பு, மோசமான குற்றச் சம்பவமாக மாறிய நிலையில், மயக்க மருந்து மாத்திரைகளை பயன்படுத்தி நபர்களை நினைவிழக்கச் செய்து, அவர்களிடமிருந்து பணம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையிட்ட நபரொருவரை பொரலஸ்கமுவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மனநல நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்து மாத்திரைகளை அதிகளவில் கொடுத்து, நபர்களை போதையேற்றி கொள்ளை சம்பவங்களை மேற்கொண்டதாக குறித்த சந்தேகநபர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
டிக்டொக் மூலம் நண்பரான தனியார் வங்கி உதவியாளர் ஒருவரை சந்தேகநபர் சந்திக்கச் சென்றுள்ளார். இருவரும் கொழும்பிலுள்ள முன்னணி வர்த்தகத் தொகுதி ஒன்றில் அமைந்துள்ள உணவகத்தில் சந்தித்த நிலையில், அங்கு இரகசியமாக மருந்து மாத்திரைகளை குறித்த நபருக்கு அருந்தச் செய்துள்ளார்.
இதன் காரணமாக வங்கி உதவியாளர் நினைவிழந்த பின்னர், அவரை பொரலஸ்கமுவ பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றுக்கு அழைத்துச் சென்ற சந்தேகநபர், அவர் அணிந்திருந்த தங்க நகைகள் மற்றும் வங்கிக் அட்டையின் மூலம் ரூ. 258,000 பணத்தை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட வங்கி உதவியாளர் பொலிஸில் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், 28 வயதுடைய சந்தேகநபர் பன்னிப்பிட்டிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது நடவடிக்கையின் போது, சந்தேகநபரிடமிருந்து ATM ஒன்று,05 போதை மருந்து மாத்திரைகள்,சில பணத்தாள்கள் எனப் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், இதே பாணியில் மற்றொரு தனியார் நிறுவன அதிகாரியையும் போதையேற்றி, அவரது தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையிட்டுள்ளமை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இந்த இரண்டு சம்பவங்களின் மூலம் சந்தேகநபர் 20 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பணம் மற்றும் தங்க நகைகளை திருடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
திருடப்பட்ட தங்க நகைகள், நீர்கொழும்பு மற்றும் கொழும்பு செட்டித் தெருவிலுள்ள நகைக் கடைகளில் விற்பனை செய்யப்பட்டுள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அத்துடன், கொள்ளையிட்ட பணத்தில் ரூ. 10 இலட்சம் தொகையை, தன்னிடம் கோபித்துக்கொண்டு சென்ற நெருங்கிய நண்பரை மீண்டும் இணைத்துக்கொள்வதற்காக, வத்தளை – மோதரை பிரதேசத்தைச் சேர்ந்த சாமியார் ஒருவருக்கு வழங்கியதாக சந்தேகநபர் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இவ்வாறு கொள்ளையிட்ட பணத்தின் பெரும்பகுதியை செலவழித்து, சந்தேகநபர் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளமையும், இதுவரை அந்த சாமியாருக்கு சுமார் 30 இலட்சம் ரூபா வழங்கியுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் அடையாள அணிவகுப்பிற்காக நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், பொரலஸ்கமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
மயக்க மருந்து கொடுத்து வங்கி ஊழியரிடம் கொள்ளை டிக்டொக் சமூக ஊடகத்தின் மூலம் உருவான நட்பு, மோசமான குற்றச் சம்பவமாக மாறிய நிலையில், மயக்க மருந்து மாத்திரைகளை பயன்படுத்தி நபர்களை நினைவிழக்கச் செய்து, அவர்களிடமிருந்து பணம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையிட்ட நபரொருவரை பொரலஸ்கமுவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.மனநல நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்து மாத்திரைகளை அதிகளவில் கொடுத்து, நபர்களை போதையேற்றி கொள்ளை சம்பவங்களை மேற்கொண்டதாக குறித்த சந்தேகநபர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. டிக்டொக் மூலம் நண்பரான தனியார் வங்கி உதவியாளர் ஒருவரை சந்தேகநபர் சந்திக்கச் சென்றுள்ளார். இருவரும் கொழும்பிலுள்ள முன்னணி வர்த்தகத் தொகுதி ஒன்றில் அமைந்துள்ள உணவகத்தில் சந்தித்த நிலையில், அங்கு இரகசியமாக மருந்து மாத்திரைகளை குறித்த நபருக்கு அருந்தச் செய்துள்ளார்.இதன் காரணமாக வங்கி உதவியாளர் நினைவிழந்த பின்னர், அவரை பொரலஸ்கமுவ பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றுக்கு அழைத்துச் சென்ற சந்தேகநபர், அவர் அணிந்திருந்த தங்க நகைகள் மற்றும் வங்கிக் அட்டையின் மூலம் ரூ. 258,000 பணத்தை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளார்.சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட வங்கி உதவியாளர் பொலிஸில் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், 28 வயதுடைய சந்தேகநபர் பன்னிப்பிட்டிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.கைது நடவடிக்கையின் போது, சந்தேகநபரிடமிருந்து ATM ஒன்று,05 போதை மருந்து மாத்திரைகள்,சில பணத்தாள்கள் எனப் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.மேலும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், இதே பாணியில் மற்றொரு தனியார் நிறுவன அதிகாரியையும் போதையேற்றி, அவரது தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையிட்டுள்ளமை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.இந்த இரண்டு சம்பவங்களின் மூலம் சந்தேகநபர் 20 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பணம் மற்றும் தங்க நகைகளை திருடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.திருடப்பட்ட தங்க நகைகள், நீர்கொழும்பு மற்றும் கொழும்பு செட்டித் தெருவிலுள்ள நகைக் கடைகளில் விற்பனை செய்யப்பட்டுள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.அத்துடன், கொள்ளையிட்ட பணத்தில் ரூ. 10 இலட்சம் தொகையை, தன்னிடம் கோபித்துக்கொண்டு சென்ற நெருங்கிய நண்பரை மீண்டும் இணைத்துக்கொள்வதற்காக, வத்தளை – மோதரை பிரதேசத்தைச் சேர்ந்த சாமியார் ஒருவருக்கு வழங்கியதாக சந்தேகநபர் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.இவ்வாறு கொள்ளையிட்ட பணத்தின் பெரும்பகுதியை செலவழித்து, சந்தேகநபர் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளமையும், இதுவரை அந்த சாமியாருக்கு சுமார் 30 இலட்சம் ரூபா வழங்கியுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.சந்தேகநபர் அடையாள அணிவகுப்பிற்காக நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், பொரலஸ்கமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.