• Aug 12 2026

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மீனவர்களுக்கு கடற்றொழில் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

Ziya / Aug 10th 2026, 3:22 pm
image

டிட்வா புயல் காரணமாகப் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களுக்குக் கடற்றொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.


கிளிநொச்சி பிராந்திய நீர்வாழ் உயிரின வளர்ப்பு விரிவாக்கல் காரியாலயத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு உரிய உபகரணங்களை உத்தியோகபூர்வமாக வழங்கி வைத்தார்.


புயல் சீற்றத்தினால் தமது வாழ்வாதாரக் கருவிகளையும் கடற்றொழில் உபகரணங்களையும் இழந்து நிர்க்கதிக்குள்ளான மீனவர்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில் இந்நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.


இந்நிகழ்வில் பிராந்திய நீர்வாழ் உயிரின வளர்ப்பு விரிவாக்கல் காரியாலய அதிகாரிகள், கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் பயனாளிகள் பலரும் கலந்து கொண்டனர்.

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மீனவர்களுக்கு கடற்றொழில் உபகரணங்கள் வழங்கி வைப்பு டிட்வா புயல் காரணமாகப் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களுக்குக் கடற்றொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.கிளிநொச்சி பிராந்திய நீர்வாழ் உயிரின வளர்ப்பு விரிவாக்கல் காரியாலயத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு உரிய உபகரணங்களை உத்தியோகபூர்வமாக வழங்கி வைத்தார்.புயல் சீற்றத்தினால் தமது வாழ்வாதாரக் கருவிகளையும் கடற்றொழில் உபகரணங்களையும் இழந்து நிர்க்கதிக்குள்ளான மீனவர்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில் இந்நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.இந்நிகழ்வில் பிராந்திய நீர்வாழ் உயிரின வளர்ப்பு விரிவாக்கல் காரியாலய அதிகாரிகள், கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் பயனாளிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement