• May 16 2025

பிக்மீ சாரதி மற்றும் வாடிக்கையாளர் மீது தாக்குதல் நடத்திய முச்சக்கர வண்டி சாரதி..! யாழில் தொடரும் அட்டகாசம்

Chithra / Jan 16th 2024, 4:47 pm
image

 

PickMe சாரதி ஒருவர் கோண்டாவிலில் உள்ள புகையிரத நிலையத்துக்கு அருகாமையில் வைத்து மற்றும் ஒரு முச்சக்கர வண்டி சாரதியினால் தாக்கப்பட்டார்.

குறிப்பிட்ட சம்பவம் இன்று மதியம் இரண்டரை மணியில் இருந்து 3:30 மணிக்குள் இடம்பெற்றுள்ளதாக பாதிக்கப்பட்ட சாரதி தெரிவித்துள்ளார். 

இவர் மட்டும் இல்லாமல் இவரை அழைத்த பிரயாணியும் குறிப்பிட்ட மற்றைய சாரதியினால் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த பகுதியில் இருந்த பயணிகள் இருவர் PickMe மூலம் முச்சக்கர வண்டியை வாடகைக்கு அமர்த்தினார். 


இதன்போது குறித்த முச்சக்கர வண்டி சாரதி வாடிக்கையாளர்கள் இருவரையும் ஏற்றிக்கொண்டு செல்ல முற்பட்டவேளை,அவ்விடத்திற்கு வந்த மற்றொரு முச்சக்கர வண்டி சாரதி அவர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளார். அத்துடன் பயணியையும் தாக்கியுள்ளார்.

இச்சம்பவம் குறித்து கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யவுள்ளதாக பாதிக்கப்பட்ட சாரதி தெரிவித்துள்ளார்.


பிக்மீ சாரதி மற்றும் வாடிக்கையாளர் மீது தாக்குதல் நடத்திய முச்சக்கர வண்டி சாரதி. யாழில் தொடரும் அட்டகாசம்  PickMe சாரதி ஒருவர் கோண்டாவிலில் உள்ள புகையிரத நிலையத்துக்கு அருகாமையில் வைத்து மற்றும் ஒரு முச்சக்கர வண்டி சாரதியினால் தாக்கப்பட்டார்.குறிப்பிட்ட சம்பவம் இன்று மதியம் இரண்டரை மணியில் இருந்து 3:30 மணிக்குள் இடம்பெற்றுள்ளதாக பாதிக்கப்பட்ட சாரதி தெரிவித்துள்ளார். இவர் மட்டும் இல்லாமல் இவரை அழைத்த பிரயாணியும் குறிப்பிட்ட மற்றைய சாரதியினால் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,குறித்த பகுதியில் இருந்த பயணிகள் இருவர் PickMe மூலம் முச்சக்கர வண்டியை வாடகைக்கு அமர்த்தினார். இதன்போது குறித்த முச்சக்கர வண்டி சாரதி வாடிக்கையாளர்கள் இருவரையும் ஏற்றிக்கொண்டு செல்ல முற்பட்டவேளை,அவ்விடத்திற்கு வந்த மற்றொரு முச்சக்கர வண்டி சாரதி அவர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளார். அத்துடன் பயணியையும் தாக்கியுள்ளார்.இச்சம்பவம் குறித்து கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யவுள்ளதாக பாதிக்கப்பட்ட சாரதி தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now