• May 22 2026

விபத்தில் சிக்கிய மூன்று மாத குழந்தை பலி; தாய் உட்பட சிலருக்கு காயம்

Chithra / Sep 17th 2025, 9:35 am
image

 

பேலியகொடை பகுதியில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று மாத குழந்தையொன்று உயிரிழந்ததுடன், மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

கொழும்பிலிருந்து கண்டி நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டி, பேலியகொட - ரோஹண விஹாரை பகுதியில் பாதசாரிகள் கடவைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் வேன் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

இதன்போது முச்சக்கரவண்டியில் தனது தாயுடன் பயணித்த குழந்தை காயமடைந்த நிலையில் சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.

களனி, பட்டிய சந்தியைச் சேர்ந்த 3 மாதங்களும் 23 நாட்களுமேயான பெண் குழந்தையே உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த குழந்தையின் தாயும், முச்சக்கரவண்டியின் சாரதி மற்றும் அதில் பயணித்த ஒருவரும் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

குழந்தையின் உடலம் கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

பேலியகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்தில் சிக்கிய மூன்று மாத குழந்தை பலி; தாய் உட்பட சிலருக்கு காயம்  பேலியகொடை பகுதியில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று மாத குழந்தையொன்று உயிரிழந்ததுடன், மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பிலிருந்து கண்டி நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டி, பேலியகொட - ரோஹண விஹாரை பகுதியில் பாதசாரிகள் கடவைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் வேன் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது முச்சக்கரவண்டியில் தனது தாயுடன் பயணித்த குழந்தை காயமடைந்த நிலையில் சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.களனி, பட்டிய சந்தியைச் சேர்ந்த 3 மாதங்களும் 23 நாட்களுமேயான பெண் குழந்தையே உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.இந்த சம்பவத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த குழந்தையின் தாயும், முச்சக்கரவண்டியின் சாரதி மற்றும் அதில் பயணித்த ஒருவரும் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டனர்.குழந்தையின் உடலம் கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.பேலியகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement