திட்டமிட்ட குற்றக்குழுவினரால் உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சட்டத்தரணிகள், சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான தொழில் வல்லுநர்களின் பாதுகாப்பு நிலைமைகளை மதிப்பீடு செய்ய பொலிஸ் தலைமையகமும் பாதுகாப்பு அமைச்சும் நடவடிக்கை எடுத்துள்ளன.
பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுத்தலின் பேரில், அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள இவ்வாறான நபர்கள் தொடர்பில் அரச புலனாய்வுச் சேவையூடாக (SIS) மதிப்பீட்டு அறிக்கைகள் கோரப்பட்டுள்ளது.
திட்டமிட்ட குற்றக்குழுவுடன் தொடர்புடைய சட்ட நடவடிக்கைகளில் ஈடுபடும் சில சட்டத்தரணிகளுக்கு, எதிர்த்தரப்பு கும்பல்களால் உயிர் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.
அண்மையில் , அக்குரெகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து, சட்டத்தரணிகள் சங்கம் இது குறித்து விரிவாக ஆராய்ந்துள்ளது.
திட்டமிட்ட குற்றக்குழுக் கைதிகள் சிறைச்சாலைக்குள் கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்துவதைத் தடுத்தல் உள்ளிட்ட சட்டவிரோதச் செயல்களுக்கு இடமளிக்காத காரணத்தினால், அதிகளவிலான சிறைச்சாலை அதிகாரிகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் சிலர் தாமாகவே முன்வந்து இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளனர்.
சில முக்கிய மதகுருமார்களும் தமக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி பாதுகாப்பு கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உண்மையான அச்சுறுத்தல் இருப்பது உறுதிசெய்யப்பட்டால் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு வுட்லர் தெரிவித்துள்ளார்.
திட்டமிட்ட குற்றக்குழுக்களால் அச்சுறுத்தல்: நூற்றுக்கணக்கானோருக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை திட்டமிட்ட குற்றக்குழுவினரால் உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சட்டத்தரணிகள், சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான தொழில் வல்லுநர்களின் பாதுகாப்பு நிலைமைகளை மதிப்பீடு செய்ய பொலிஸ் தலைமையகமும் பாதுகாப்பு அமைச்சும் நடவடிக்கை எடுத்துள்ளன.பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுத்தலின் பேரில், அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள இவ்வாறான நபர்கள் தொடர்பில் அரச புலனாய்வுச் சேவையூடாக (SIS) மதிப்பீட்டு அறிக்கைகள் கோரப்பட்டுள்ளது.திட்டமிட்ட குற்றக்குழுவுடன் தொடர்புடைய சட்ட நடவடிக்கைகளில் ஈடுபடும் சில சட்டத்தரணிகளுக்கு, எதிர்த்தரப்பு கும்பல்களால் உயிர் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.அண்மையில் , அக்குரெகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து, சட்டத்தரணிகள் சங்கம் இது குறித்து விரிவாக ஆராய்ந்துள்ளது.திட்டமிட்ட குற்றக்குழுக் கைதிகள் சிறைச்சாலைக்குள் கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்துவதைத் தடுத்தல் உள்ளிட்ட சட்டவிரோதச் செயல்களுக்கு இடமளிக்காத காரணத்தினால், அதிகளவிலான சிறைச்சாலை அதிகாரிகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் சிலர் தாமாகவே முன்வந்து இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளனர்.சில முக்கிய மதகுருமார்களும் தமக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி பாதுகாப்பு கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.உண்மையான அச்சுறுத்தல் இருப்பது உறுதிசெய்யப்பட்டால் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு வுட்லர் தெரிவித்துள்ளார்.