• Oct 28 2026

மழையால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான குடும்பங்கள் - பலியான உயிர்! வீடுகளை இழந்து இடம்பெயர்ந்த மக்கள்

Chithra / Oct 27th 2026, 10:09 am
image


 

இலங்கையில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக 12 மாவட்டங்களில் 3,162 குடும்பங்களைச் சேர்ந்த 12,032 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.


ஒக்டோபர் 23ஆம் திகதி காலை 6 மணி முதல் இன்று (27) காலை 6 மணி வரையான காலப்பகுதியில் பதிவான அனர்த்தங்கள் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள நிலவர அறிக்கையிலேயே இந்தத் தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.


அதன்படி, சீரற்ற வானிலையால் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.


மேலும், இரண்டு வீடுகள் முழுமையாகவும், 227 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டவர்களில் 99 குடும்பங்களைச் சேர்ந்த 304 பேர் பாதுகாப்பு மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.


அத்துடன், 243 குடும்பங்களைச் சேர்ந்த 853 பேர் தமது உறவினர்களின் வீடுகளில் தற்காலிகமாகத் தங்கியுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.


வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் சீரற்ற வானிலையால் பாதிப்புகள் பதிவாகியுள்ளன.


யாழ்ப்பாண மாவட்டத்தில் இரண்டு பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த 3 குடும்பங்களின் 7 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


மன்னார் மாவட்டத்தில் ஒரு பிரதேச செயலாளர் பிரிவில் 50 குடும்பங்களைச் சேர்ந்த 122 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


அத்துடன், மன்னார் மாவட்டத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதுடன், பாதிக்கப்பட்ட 50 குடும்பங்களைச் சேர்ந்த 122 பேரும் பாதுகாப்பு மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மலையகப் பகுதிகளைப் பொறுத்தவரையில், கண்டி மாவட்டத்தின் இரண்டு பிரதேச செயலாளர் பிரிவுகளில் 4 குடும்பங்களைச் சேர்ந்த 23 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


நாட்டில் சீரற்ற வானிலையால் அதிகளவான மக்கள் பாதிக்கப்பட்ட மாவட்டமாக புத்தளம் பதிவாகியுள்ளது.


அந்த மாவட்டத்தில் மாத்திரம் 2,166 குடும்பங்களைச் சேர்ந்த 8,446 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.


இதற்கு அடுத்தபடியாக இரத்தினபுரி மாவட்டத்தில் 741 குடும்பங்களைச் சேர்ந்த 2,751 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


இதேவேளை, கொழும்பு மாவட்டத்தில் 96 குடும்பங்களைச் சேர்ந்த 312 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 61 குடும்பங்களைச் சேர்ந்த 218 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழையால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான குடும்பங்கள் - பலியான உயிர் வீடுகளை இழந்து இடம்பெயர்ந்த மக்கள்  இலங்கையில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக 12 மாவட்டங்களில் 3,162 குடும்பங்களைச் சேர்ந்த 12,032 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.ஒக்டோபர் 23ஆம் திகதி காலை 6 மணி முதல் இன்று (27) காலை 6 மணி வரையான காலப்பகுதியில் பதிவான அனர்த்தங்கள் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள நிலவர அறிக்கையிலேயே இந்தத் தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.அதன்படி, சீரற்ற வானிலையால் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.மேலும், இரண்டு வீடுகள் முழுமையாகவும், 227 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டவர்களில் 99 குடும்பங்களைச் சேர்ந்த 304 பேர் பாதுகாப்பு மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.அத்துடன், 243 குடும்பங்களைச் சேர்ந்த 853 பேர் தமது உறவினர்களின் வீடுகளில் தற்காலிகமாகத் தங்கியுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் சீரற்ற வானிலையால் பாதிப்புகள் பதிவாகியுள்ளன.யாழ்ப்பாண மாவட்டத்தில் இரண்டு பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த 3 குடும்பங்களின் 7 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.மன்னார் மாவட்டத்தில் ஒரு பிரதேச செயலாளர் பிரிவில் 50 குடும்பங்களைச் சேர்ந்த 122 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அத்துடன், மன்னார் மாவட்டத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதுடன், பாதிக்கப்பட்ட 50 குடும்பங்களைச் சேர்ந்த 122 பேரும் பாதுகாப்பு மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மலையகப் பகுதிகளைப் பொறுத்தவரையில், கண்டி மாவட்டத்தின் இரண்டு பிரதேச செயலாளர் பிரிவுகளில் 4 குடும்பங்களைச் சேர்ந்த 23 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.நாட்டில் சீரற்ற வானிலையால் அதிகளவான மக்கள் பாதிக்கப்பட்ட மாவட்டமாக புத்தளம் பதிவாகியுள்ளது.அந்த மாவட்டத்தில் மாத்திரம் 2,166 குடும்பங்களைச் சேர்ந்த 8,446 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.இதற்கு அடுத்தபடியாக இரத்தினபுரி மாவட்டத்தில் 741 குடும்பங்களைச் சேர்ந்த 2,751 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதேவேளை, கொழும்பு மாவட்டத்தில் 96 குடும்பங்களைச் சேர்ந்த 312 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 61 குடும்பங்களைச் சேர்ந்த 218 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement