• May 25 2026

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது! ரணில் வெளியிட்ட தகவல்

Chithra / Mar 2nd 2026, 1:31 pm
image

  

ஈரானிடம் இருந்து எண்ணெய் கிடைக்காவிட்டாலும் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.


கொழும்பிலுள்ள அரசியல் காரியாலயத்தில் சமூக ஊடகச் செயற்பாட்டாளர்களுடன் நடைபெற்ற சந்திப்பின் போதே முன்னாள் ஜனாதிபதி ரணில் இதனைக் குறிப்பிட்டார். 


ஈரானை விட ஏனைய நாடுகளிலிருந்தே இலங்கை அதிகளவில் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதாகக் குறிப்பிட்ட ரணில், 

ஈரான் ஒருவேளை ஹோர்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) எண்ணெய் கப்பல்கள் மீது குண்டுகளை வீசி, கப்பல் போக்குவரத்தைத் தடுத்தால் மாத்திரமே பிரச்சினை ஏற்படும் எனக் குறிப்பிட்டார்.


ஆனால், தற்போது வரை அத்தகையதொரு சூழல் ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.


இதேவேளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக இலங்கை செயற்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.


இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது ரணில் வெளியிட்ட தகவல்   ஈரானிடம் இருந்து எண்ணெய் கிடைக்காவிட்டாலும் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.கொழும்பிலுள்ள அரசியல் காரியாலயத்தில் சமூக ஊடகச் செயற்பாட்டாளர்களுடன் நடைபெற்ற சந்திப்பின் போதே முன்னாள் ஜனாதிபதி ரணில் இதனைக் குறிப்பிட்டார். ஈரானை விட ஏனைய நாடுகளிலிருந்தே இலங்கை அதிகளவில் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதாகக் குறிப்பிட்ட ரணில், ஈரான் ஒருவேளை ஹோர்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) எண்ணெய் கப்பல்கள் மீது குண்டுகளை வீசி, கப்பல் போக்குவரத்தைத் தடுத்தால் மாத்திரமே பிரச்சினை ஏற்படும் எனக் குறிப்பிட்டார்.ஆனால், தற்போது வரை அத்தகையதொரு சூழல் ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.இதேவேளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக இலங்கை செயற்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement