• May 14 2025

நாட்டில் தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்ட அதிரடி மாற்றம்

Chithra / May 14th 2025, 12:50 pm
image


நாட்டில் தங்கத்தின் விலை சுமார் 6,000 ரூபாய் குறைந்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன. 

அதன்படி,கொழும்பு செட்டியார் தெருவில் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 240,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இன்று காலை நிலவரப்படி இந்த பெறுமதி பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்தவகையில் நாட்டில் தங்கத்தின் விலை சுமார் 6,000 ரூபா வரையில் குறைந்துள்ளதாக சந்தை தரவுகள் காட்டுகின்றன.

இதேவேளை கடந்த சனிக்கிழமை 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 246,000 ரூபாவாகவும், 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 266,000 ரூபாவாக பதிவாகியிருந்தது.

இந்த நிலையில் இன்று 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை இன்று 260,000 ரூபாவாக குறைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. 

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 238,500 ரூபாவாகவும், 18 கரட் தங்கம் பவுண் ஒன்று 195,000 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது. 

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 32,500 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 29,813 ரூபாவாகவும், 18 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 24,375 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.


நாட்டில் தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்ட அதிரடி மாற்றம் நாட்டில் தங்கத்தின் விலை சுமார் 6,000 ரூபாய் குறைந்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி,கொழும்பு செட்டியார் தெருவில் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 240,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.இன்று காலை நிலவரப்படி இந்த பெறுமதி பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அந்தவகையில் நாட்டில் தங்கத்தின் விலை சுமார் 6,000 ரூபா வரையில் குறைந்துள்ளதாக சந்தை தரவுகள் காட்டுகின்றன.இதேவேளை கடந்த சனிக்கிழமை 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 246,000 ரூபாவாகவும், 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 266,000 ரூபாவாக பதிவாகியிருந்தது.இந்த நிலையில் இன்று 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை இன்று 260,000 ரூபாவாக குறைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 238,500 ரூபாவாகவும், 18 கரட் தங்கம் பவுண் ஒன்று 195,000 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 32,500 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 29,813 ரூபாவாகவும், 18 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 24,375 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement