• May 26 2025

சட்டத்தரணிக்கு அதிர்ச்சி கொடுத்த புழு சோற்று பாசல்; மனித பாவனைக்கு உதவாத உணவு பொருட்கள் மீட்பு

Chithra / May 25th 2025, 7:53 am
image



மட்டக்களப்பு நகரில் சாப்பாட்டு கடை ஒன்றில் வாங்கிய மதிய உணவான சோற்று பாசலில் புழு அவதானிக்கப்பட்டதை அடுத்து சட்டத்தரணி ஒருவர்  சுகாதார அதிகாரிகளுக்கு நேற்று முறைப்பாடு பதிவுசெய்துள்ளார்.

இந்நிலையில் உடனடியாக  குறித்த கடையை சோதனையிட்ட சுகாதார பிரிவினர், அங்கு மனித பாவனைக்கு உதவாத உணவு தயாரிக்கும் பொருட்களை மீட்டதுடன், கடை உரிமையாளருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு பதிவு செய்யவுள்ளதாக பொது சுகாதரா பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் 

குறித்த கடையில் வழமையாக மதிய உணவான சோற்று பாசலை சட்டக்தரணி ஒருவர் வாங்கி சாப்பிட்டு வந்த நிலையில் சம்பவதினமான  நேற்று மதிய உணவான சோற்று பாசலை வாங்கி  தனது காரியாலயத்தில் வைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்த போது அதில் உள்ள கரட் கறியில் புழு ஓடுவதை கண்டுபிடித்துள்ளார்.

இதனையடுத்து சாப்பாட்டு பாசலுடன் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரிகள் காரியாலயத்துக்கு சென்று குறித்த கடைக்கு எதிராக முறைப்பாடு செய்தார். 

இதனையடுத்து உடனடியாக நடவடிக்கை எடுத்த  பொது சுகாதார பரிசோதகர்கள், குறித்த கடையை முற்றுகையிட்டு சோதனையையடுத்து அங்கு மனித பாவனைக்கு உதவாத உணவு மற்றும் சிற்றுண்டிகள் தயாரிக்கும் பல உணவு பொருட்களை குளிரூட்டியில் இருந்து மீட்டனர்.

குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக  கடை உரிமையாளருக்கு எதிராக நீதிமன்றில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (27) வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.


சட்டத்தரணிக்கு அதிர்ச்சி கொடுத்த புழு சோற்று பாசல்; மனித பாவனைக்கு உதவாத உணவு பொருட்கள் மீட்பு மட்டக்களப்பு நகரில் சாப்பாட்டு கடை ஒன்றில் வாங்கிய மதிய உணவான சோற்று பாசலில் புழு அவதானிக்கப்பட்டதை அடுத்து சட்டத்தரணி ஒருவர்  சுகாதார அதிகாரிகளுக்கு நேற்று முறைப்பாடு பதிவுசெய்துள்ளார்.இந்நிலையில் உடனடியாக  குறித்த கடையை சோதனையிட்ட சுகாதார பிரிவினர், அங்கு மனித பாவனைக்கு உதவாத உணவு தயாரிக்கும் பொருட்களை மீட்டதுடன், கடை உரிமையாளருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு பதிவு செய்யவுள்ளதாக பொது சுகாதரா பரிசோதகர்கள் தெரிவித்தனர்.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் குறித்த கடையில் வழமையாக மதிய உணவான சோற்று பாசலை சட்டக்தரணி ஒருவர் வாங்கி சாப்பிட்டு வந்த நிலையில் சம்பவதினமான  நேற்று மதிய உணவான சோற்று பாசலை வாங்கி  தனது காரியாலயத்தில் வைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்த போது அதில் உள்ள கரட் கறியில் புழு ஓடுவதை கண்டுபிடித்துள்ளார்.இதனையடுத்து சாப்பாட்டு பாசலுடன் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரிகள் காரியாலயத்துக்கு சென்று குறித்த கடைக்கு எதிராக முறைப்பாடு செய்தார். இதனையடுத்து உடனடியாக நடவடிக்கை எடுத்த  பொது சுகாதார பரிசோதகர்கள், குறித்த கடையை முற்றுகையிட்டு சோதனையையடுத்து அங்கு மனித பாவனைக்கு உதவாத உணவு மற்றும் சிற்றுண்டிகள் தயாரிக்கும் பல உணவு பொருட்களை குளிரூட்டியில் இருந்து மீட்டனர்.குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக  கடை உரிமையாளருக்கு எதிராக நீதிமன்றில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (27) வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement