• Mar 10 2026

ஆபத்தாக மாறும் உடுத்துறை வேம்படி வீதி வளைவு

Chithra / Feb 11th 2026, 9:18 pm
image


யாழ். வடமராட்சி கிழக்கு உடுத்துறை வேம்படி வீதி சந்தி விபத்து ஏற்படும் ஆபத்தான இடமாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உடுத்துறை வேம்படி சந்தியின் வளைவு பகுதியை குறிக்கும் வீதிக் குறியீடுகள் அமைக்கப்படாமையே இந்த ஆபத்திற்கு காரணமென அவ்வீதியால் பயணம் செய்யும் பயணிகள் தெரிவிக்கின்றனர்.

வீதிக் குறியீடு இல்லாத குறித்த ஆபத்தான வளைவில் அண்மைக்காலமாக பல விபத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உடனடியாக வேம்படி சந்தி வளைவு பகுதியில் வீதி குறியீடுகளை அமைத்து விபத்துக்களை தவிர்க்குமாறு அதிகாரிகளை மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.


ஆபத்தாக மாறும் உடுத்துறை வேம்படி வீதி வளைவு யாழ். வடமராட்சி கிழக்கு உடுத்துறை வேம்படி வீதி சந்தி விபத்து ஏற்படும் ஆபத்தான இடமாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.உடுத்துறை வேம்படி சந்தியின் வளைவு பகுதியை குறிக்கும் வீதிக் குறியீடுகள் அமைக்கப்படாமையே இந்த ஆபத்திற்கு காரணமென அவ்வீதியால் பயணம் செய்யும் பயணிகள் தெரிவிக்கின்றனர்.வீதிக் குறியீடு இல்லாத குறித்த ஆபத்தான வளைவில் அண்மைக்காலமாக பல விபத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.உடனடியாக வேம்படி சந்தி வளைவு பகுதியில் வீதி குறியீடுகளை அமைத்து விபத்துக்களை தவிர்க்குமாறு அதிகாரிகளை மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement