• Aug 13 2026

மருத்துவமனை வாசலில் அரங்கேறிய அதிசயம்: ஓடும் மோட்டார் சைக்கிளிலேயே குழந்தை பெற்றெடுத்த தாய்!

Tamil nila / Aug 9th 2026, 9:42 pm
image

மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் ஓடும் மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையிலேயே பெண் ஒருவர் குழந்தையைப் பெற்றெடுத்த அரிய சம்பவம் ஒன்று வியட்நாமில் அரங்கேறியுள்ளது.

வியட்நாமின் தாய் குவாங் மாகாணத்திற்கு உட்பட்ட புலுவாங் பகுதியில் வசிக்கும் 25 வயதுடைய நிறைமாத கர்ப்பிணிப் பெண்ணுக்குத் திடீரெனக் கடுமையான பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த கணவர், உடனடியாக மனைவியை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு விரைந்துள்ளார்.

மருத்துவமனையை எட்டும் முன்பே, நுழைவாயில் அருகிலேயே அப்பெண்ணுக்குப் பிரசவ வலி உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் யாருமே எதிர்பாராத விதமாக, ஓடும் பைக்கின் பின் இருக்கையிலேயே அப்பெண்ணுக்குப் சுகப்பிரசவமாகிக் குழந்தை பிறந்துள்ளது.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்த மருத்துவர்களும் செவிலியர்களும் உடனடியாக ஓடிவந்து, தாயையும் புதிதாகப் பிறந்த குழந்தையையும் பாதுகாப்பாக மீட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர். தற்போது தாயும் சேயும் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.

மருத்துவமனை ஊழியர்களின் துரிதமான முதலுதவியையும், அந்தத் தாயின் தைரியத்தையும் பாராட்டி, இச்சம்பவம் தொடர்பான காணொளி தற்போது சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்து வைரலாகி வருகிறது.

மருத்துவமனை வாசலில் அரங்கேறிய அதிசயம்: ஓடும் மோட்டார் சைக்கிளிலேயே குழந்தை பெற்றெடுத்த தாய் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் ஓடும் மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையிலேயே பெண் ஒருவர் குழந்தையைப் பெற்றெடுத்த அரிய சம்பவம் ஒன்று வியட்நாமில் அரங்கேறியுள்ளது.வியட்நாமின் தாய் குவாங் மாகாணத்திற்கு உட்பட்ட புலுவாங் பகுதியில் வசிக்கும் 25 வயதுடைய நிறைமாத கர்ப்பிணிப் பெண்ணுக்குத் திடீரெனக் கடுமையான பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த கணவர், உடனடியாக மனைவியை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு விரைந்துள்ளார்.மருத்துவமனையை எட்டும் முன்பே, நுழைவாயில் அருகிலேயே அப்பெண்ணுக்குப் பிரசவ வலி உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் யாருமே எதிர்பாராத விதமாக, ஓடும் பைக்கின் பின் இருக்கையிலேயே அப்பெண்ணுக்குப் சுகப்பிரசவமாகிக் குழந்தை பிறந்துள்ளது.இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்த மருத்துவர்களும் செவிலியர்களும் உடனடியாக ஓடிவந்து, தாயையும் புதிதாகப் பிறந்த குழந்தையையும் பாதுகாப்பாக மீட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர். தற்போது தாயும் சேயும் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.மருத்துவமனை ஊழியர்களின் துரிதமான முதலுதவியையும், அந்தத் தாயின் தைரியத்தையும் பாராட்டி, இச்சம்பவம் தொடர்பான காணொளி தற்போது சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்து வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement

Advertisement