• May 16 2025

கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரிக்கு காத்திருந்த அதிர்ச்சி; மீண்டும் துப்பாக்கிச்சூடு

Chithra / May 16th 2025, 7:40 am
image



கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரிகளை வாளால் வெட்ட முயன்ற நபர் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். 

சட்டவிரோத மதுபானம் தொடர்பில் பொலிஸ் அவசர அழைப்பு பிரிவுக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக,  காலி  - தெலிக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கினிமெல்லகஹ பிரதேசத்தில் உள்ள வீடொன்றை பொலிஸார் சோதனையிட்ட போதே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

இதன்போது, தெலிக்கடை பொலிஸ் அதிகாரிகளை நபரொருவர் வாளால் தாக்க முயன்றபோது, ​​அங்கிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். 

பின்னர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர், காலி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

காயமடைந்த நபர் 30 வயதுடையவர் என்றும் அவரது நிலைமை மோசமாக இல்லை என்றும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரிக்கு காத்திருந்த அதிர்ச்சி; மீண்டும் துப்பாக்கிச்சூடு கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரிகளை வாளால் வெட்ட முயன்ற நபர் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். சட்டவிரோத மதுபானம் தொடர்பில் பொலிஸ் அவசர அழைப்பு பிரிவுக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக,  காலி  - தெலிக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கினிமெல்லகஹ பிரதேசத்தில் உள்ள வீடொன்றை பொலிஸார் சோதனையிட்ட போதே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதன்போது, தெலிக்கடை பொலிஸ் அதிகாரிகளை நபரொருவர் வாளால் தாக்க முயன்றபோது, ​​அங்கிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். பின்னர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர், காலி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். காயமடைந்த நபர் 30 வயதுடையவர் என்றும் அவரது நிலைமை மோசமாக இல்லை என்றும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement