• Apr 17 2026

அடுத்த வாரம் இலங்கையை வந்தடையும் அரிசிக் கப்பல்!

Chithra / Apr 3rd 2026, 3:48 pm
image

சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி தட்டுப்பாட்டுக்குத் தீர்வாக, மாற்று அரிசி வகைகளை இறக்குமதி செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்ட நிலையில் அரிசியை ஏற்றிய முதலாவது கப்பல் அடுத்த வாரம் நாட்டை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


அத்தியாவசிய உணவுப்பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் கணேஷ் விநாயகசுந்தரம்  இதனைத் தெரிவித்துள்ளார்.


நாட்டின் உள்நாட்டு சந்தையில் நிலவும் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி தட்டுப்பாட்டுக்குத் தீர்வாக, மாற்று அரிசி வகைகளை இறக்குமதி செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.


ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.


அதன்படி, பொன்னி சம்பா, பால் பொன்னி மற்றும் ஜி.ஆர் 11 என்று அழைக்கப்படும் அரிசி வகைகளை இறக்குமதி செய்வதற்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


அதிகபட்சமாக ஆயிரத்து 40 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய அமைச்சரவை கடந்த வாரத்தில் அனுமதி வழங்கியுள்ளது.


இதேவேளை, இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கு நிர்ணயிக்கப்பட்ட விலை வரம்பை விதிக்க வேண்டாம் என வர்த்தக அமைச்சிடம் கோரியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்

அடுத்த வாரம் இலங்கையை வந்தடையும் அரிசிக் கப்பல் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி தட்டுப்பாட்டுக்குத் தீர்வாக, மாற்று அரிசி வகைகளை இறக்குமதி செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்ட நிலையில் அரிசியை ஏற்றிய முதலாவது கப்பல் அடுத்த வாரம் நாட்டை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்தியாவசிய உணவுப்பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் கணேஷ் விநாயகசுந்தரம்  இதனைத் தெரிவித்துள்ளார்.நாட்டின் உள்நாட்டு சந்தையில் நிலவும் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி தட்டுப்பாட்டுக்குத் தீர்வாக, மாற்று அரிசி வகைகளை இறக்குமதி செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி, பொன்னி சம்பா, பால் பொன்னி மற்றும் ஜி.ஆர் 11 என்று அழைக்கப்படும் அரிசி வகைகளை இறக்குமதி செய்வதற்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.அதிகபட்சமாக ஆயிரத்து 40 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய அமைச்சரவை கடந்த வாரத்தில் அனுமதி வழங்கியுள்ளது.இதேவேளை, இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கு நிர்ணயிக்கப்பட்ட விலை வரம்பை விதிக்க வேண்டாம் என வர்த்தக அமைச்சிடம் கோரியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்

Advertisement

Advertisement

Advertisement