• Aug 17 2025

அரசாங்கத்தின் பொய்களை அம்பலப்படுத்தும் பொறுப்பு முன்னூறு உறுப்பினர்களிடம் ஒப்படைப்பு

Chithra / Aug 17th 2025, 11:30 am
image

 

தற்போதைய அரசாங்கத்தின் பொய்களை அம்பலப்படுத்தி அவற்றை விளம்பரப்படுத்தும் பணி பொதுஜன ஐக்கிய முன்னணியின் முன்னூறு பிரதேச சபை உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அந்த கட்சியின் தலைவரான முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

ஐக்கிய பொதுஜன ஐக்கிய முன்னணியின் பிரதேச சபை உறுப்பினர்களுக்காக நடத்தப்பட்ட ஒரு செயலமர்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய அரசாங்கத்திடம் ஒரு குறிப்பிட்ட திட்டம் இல்லை என்றும் முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தில் மக்கள் சார்பாக எடுக்கப்பட வேண்டிய பல நடவடிக்கைகள் குறித்து பிரதேச சபை உறுப்பினர்களுக்கு தெளிவூட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சமகால அரசியல் நிலமைகள் தொடர்பில் இந்த செயலமர்வில் ஆராயப்பட்டதாக அனுர பிரியதர்சன யாப்பா குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் பொய்களை அம்பலப்படுத்தும் பொறுப்பு முன்னூறு உறுப்பினர்களிடம் ஒப்படைப்பு  தற்போதைய அரசாங்கத்தின் பொய்களை அம்பலப்படுத்தி அவற்றை விளம்பரப்படுத்தும் பணி பொதுஜன ஐக்கிய முன்னணியின் முன்னூறு பிரதேச சபை உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அந்த கட்சியின் தலைவரான முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.ஐக்கிய பொதுஜன ஐக்கிய முன்னணியின் பிரதேச சபை உறுப்பினர்களுக்காக நடத்தப்பட்ட ஒரு செயலமர்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.தற்போதைய அரசாங்கத்திடம் ஒரு குறிப்பிட்ட திட்டம் இல்லை என்றும் முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.இந்த விடயத்தில் மக்கள் சார்பாக எடுக்கப்பட வேண்டிய பல நடவடிக்கைகள் குறித்து பிரதேச சபை உறுப்பினர்களுக்கு தெளிவூட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.மேலும், சமகால அரசியல் நிலமைகள் தொடர்பில் இந்த செயலமர்வில் ஆராயப்பட்டதாக அனுர பிரியதர்சன யாப்பா குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement