• Aug 17 2025

மன்னாரில் 15 வது நாளாக தொடரும் போராட்டம்; நூற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்பு

Chithra / Aug 17th 2025, 1:02 pm
image

மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்றைய தினம்  15 ஆவது நாளாகவும் சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மன்னார் மக்கள் மற்றும் இளையோர் ஒன்றிணைந்து முன்னெடுத்து வருகின்ற போராட்டத்திற்கு இன்றைய தினம்  ஆதரவு வழங்கும் வகையில் பள்ளிமுனை  மற்றும் பெரிய கரிசல் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் குறித்த போராட்டத்தில் இணைந்து கொண்டு தமது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் மன்னாரைச் சேர்ந்த யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களும் பங்கேற்றனர்.

குறித்த போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கருப்பு பட்டி அணிந்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இன்றைய போராட்டத்தில் தமிழ், முஸ்லிம் மக்களும், மத தலைவர்களும், அருட் சகோதரிகளும் ஒன்றிணைந்துள்ளனர்.

இன்றைய தினம் (17)  காலை முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற குறித்த போராட்டமானது மன்னார் நகர சுற்றுவட்ட பகுதியில் இடம் பெற்று வருகிறது.போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


மன்னாரில் 15 வது நாளாக தொடரும் போராட்டம்; நூற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்பு மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்றைய தினம்  15 ஆவது நாளாகவும் சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.மன்னார் மக்கள் மற்றும் இளையோர் ஒன்றிணைந்து முன்னெடுத்து வருகின்ற போராட்டத்திற்கு இன்றைய தினம்  ஆதரவு வழங்கும் வகையில் பள்ளிமுனை  மற்றும் பெரிய கரிசல் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் குறித்த போராட்டத்தில் இணைந்து கொண்டு தமது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.மேலும் மன்னாரைச் சேர்ந்த யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களும் பங்கேற்றனர்.குறித்த போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கருப்பு பட்டி அணிந்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.இன்றைய போராட்டத்தில் தமிழ், முஸ்லிம் மக்களும், மத தலைவர்களும், அருட் சகோதரிகளும் ஒன்றிணைந்துள்ளனர்.இன்றைய தினம் (17)  காலை முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற குறித்த போராட்டமானது மன்னார் நகர சுற்றுவட்ட பகுதியில் இடம் பெற்று வருகிறது.போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement