பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு தற்போது வழங்கப்படும் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பில் இன்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவால் பாராளுமன்றத்தில் வெளிப்படுத்தப்பட்டது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இந்தத் தகவல்களை வெளியிட்டார்.
அதற்கமைய, பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு மாதாந்தம் 54,285 ரூபா கொடுப்பனவாக வழங்கப்படுகிறது.மாதாந்த உபசரிப்புக் கொடுப்பனவாக 1,000 ரூபா செலுத்தப்படுகிறது.
மாதாந்த சாரதிக் கொடுப்பனவாக 3,500 ரூபா வழங்கப்படுவதுடன், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சின் ஊடாக சாரதி ஒருவரைப் பெற்றுக்கொண்டால், குறித்த உறுப்பினருக்கு சாரதிக் கொடுப்பனவு வழங்கப்பட மாட்டாது எனவும் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
தொலைபேசிக் கொடுப்பனவாக 50,000 ரூபாவும், போக்குவரத்துக் கொடுப்பனவாக 15,000 ரூபாவும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு வழங்கப்படுகின்றது.
அலுவலகக் கொடுப்பனவு ஒரு இலட்சம் ரூபாவாகும், அத்துடன் கூட்டங்களுக்கான கொடுப்பனவாக நாளொன்றுக்கு 2,500 ரூபா செலுத்தப்படுகின்றது.
நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்வதற்காக நாளொன்றுக்கு 2,500 ரூபாவும், குழுக்கூட்டக் கொடுப்பனவாக நாளொன்றுக்கு 2,500 ரூபாவும் செலுத்தப்படுவதாகப் பிரதமர் குறிப்பிட்டார்.
பாராளுமன்ற அமர்வுகள் இல்லாத நாட்களில் நடைபெறும் குழுக்கூட்டங்களுக்காக நாளொன்றுக்கு 2,500 ரூபா வழங்கப்படும்.
மேலும், ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும் பிரதிநிதித்துவப்படுத்தும் மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்திற்கு உள்ள தூரத்தை அடிப்படையாகக் கொண்டும், தேசியப் பட்டியல் உறுப்பினர்களுக்கு 419.76 லீற்றர் டீசலை அடிப்படையாகக் கொண்டும், ஒவ்வொரு மாதமும் முதலாம் திகதியன்று சந்தையில் உள்ள ஒரு லீற்றர் டீசலின் அங்கீகரிக்கப்பட்ட விலைக்கு அமைய எரிபொருள் கொடுப்பனவு வழங்கப்படுவதாகப் பிரதமர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை ஜே.வி.பி மற்றும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது வேதனத்தை கட்சி நிதிக்கே வழங்குகிறார்கள் என்பது நாட்டு மக்கள் அறிந்த உண்மை எனவும், இதுவே தமது அரசியல் இயக்கத்தின் கலாசாரம் எனவும் பிரதமர் தெரிவித்தார்.
எமது வங்கிக் கணக்குகளின் வெளிப்படைத்தன்மையை நாட்டுக்குக் காட்ட வாய்ப்பளித்தமைக்கு நன்றி. ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளும் தங்கள் கட்சி நிதிகள் தொடர்பாக இவ்வாறு செயற்பட வேண்டும் என நான் முன்மொழிகிறேன்.
எமது 159 உறுப்பினர்களும் ஒருவருக்கொருவர் வேறுபட்டவர்கள். அனைவரினதும் வாழ்க்கைக் கதைகளை இங்கே கூற முடியாது, ஆனால் நாங்கள் எப்படியோ வாழ்கிறோம். ஒரு அரசியல் இயக்கமாக நாங்கள் முன்மாதிரியாகச் செயற்படுகிறோம்.
பிரதமரின் கருத்துக்குப் பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி,
பொய் சொல்வதே ஜே.வி.பியின் கலாசாரம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் இரத்து செய்யப்பட்டாலும், இவர்களுக்குத் தேவையான அனைத்தையும் கட்சி நிதியிலிருந்து பெற்றுக்கொள்கிறார்கள். இவர்கள் சம்பளம் பெறாமல் இருப்பதில்லை. இந்த உறுப்பினர்களின் பெயரிலேயே வங்கிக் கணக்குகள் உள்ளன. அதில் ஒரு பகுதியை மட்டுமே கட்சிக்கு அனுப்பிவிட்டு, எஞ்சிய பகுதியை அவர்கள் வைத்துக்கொள்கிறார்கள் என்பதை நான் நிரூபிப்பேன். எனக் கடுமையாகச் சாடினார்.
சமிந்த விஜேசிறியின் இந்தக் கருத்துக்கு ஆளுங்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால் சபையில் சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது.
எம்.பி.க்களின் சம்பளம், கொடுப்பனவுகளை அம்பலப்படுத்திய பிரதமர் - பரபரப்பான நாடாளுமன்றம் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு தற்போது வழங்கப்படும் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பில் இன்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவால் பாராளுமன்றத்தில் வெளிப்படுத்தப்பட்டது.ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இந்தத் தகவல்களை வெளியிட்டார்.அதற்கமைய, பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு மாதாந்தம் 54,285 ரூபா கொடுப்பனவாக வழங்கப்படுகிறது.மாதாந்த உபசரிப்புக் கொடுப்பனவாக 1,000 ரூபா செலுத்தப்படுகிறது.மாதாந்த சாரதிக் கொடுப்பனவாக 3,500 ரூபா வழங்கப்படுவதுடன், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சின் ஊடாக சாரதி ஒருவரைப் பெற்றுக்கொண்டால், குறித்த உறுப்பினருக்கு சாரதிக் கொடுப்பனவு வழங்கப்பட மாட்டாது எனவும் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.தொலைபேசிக் கொடுப்பனவாக 50,000 ரூபாவும், போக்குவரத்துக் கொடுப்பனவாக 15,000 ரூபாவும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு வழங்கப்படுகின்றது.அலுவலகக் கொடுப்பனவு ஒரு இலட்சம் ரூபாவாகும், அத்துடன் கூட்டங்களுக்கான கொடுப்பனவாக நாளொன்றுக்கு 2,500 ரூபா செலுத்தப்படுகின்றது.நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்வதற்காக நாளொன்றுக்கு 2,500 ரூபாவும், குழுக்கூட்டக் கொடுப்பனவாக நாளொன்றுக்கு 2,500 ரூபாவும் செலுத்தப்படுவதாகப் பிரதமர் குறிப்பிட்டார்.பாராளுமன்ற அமர்வுகள் இல்லாத நாட்களில் நடைபெறும் குழுக்கூட்டங்களுக்காக நாளொன்றுக்கு 2,500 ரூபா வழங்கப்படும்.மேலும், ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும் பிரதிநிதித்துவப்படுத்தும் மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்திற்கு உள்ள தூரத்தை அடிப்படையாகக் கொண்டும், தேசியப் பட்டியல் உறுப்பினர்களுக்கு 419.76 லீற்றர் டீசலை அடிப்படையாகக் கொண்டும், ஒவ்வொரு மாதமும் முதலாம் திகதியன்று சந்தையில் உள்ள ஒரு லீற்றர் டீசலின் அங்கீகரிக்கப்பட்ட விலைக்கு அமைய எரிபொருள் கொடுப்பனவு வழங்கப்படுவதாகப் பிரதமர் மேலும் தெரிவித்தார்.இதேவேளை ஜே.வி.பி மற்றும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது வேதனத்தை கட்சி நிதிக்கே வழங்குகிறார்கள் என்பது நாட்டு மக்கள் அறிந்த உண்மை எனவும், இதுவே தமது அரசியல் இயக்கத்தின் கலாசாரம் எனவும் பிரதமர் தெரிவித்தார்.எமது வங்கிக் கணக்குகளின் வெளிப்படைத்தன்மையை நாட்டுக்குக் காட்ட வாய்ப்பளித்தமைக்கு நன்றி. ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளும் தங்கள் கட்சி நிதிகள் தொடர்பாக இவ்வாறு செயற்பட வேண்டும் என நான் முன்மொழிகிறேன்.எமது 159 உறுப்பினர்களும் ஒருவருக்கொருவர் வேறுபட்டவர்கள். அனைவரினதும் வாழ்க்கைக் கதைகளை இங்கே கூற முடியாது, ஆனால் நாங்கள் எப்படியோ வாழ்கிறோம். ஒரு அரசியல் இயக்கமாக நாங்கள் முன்மாதிரியாகச் செயற்படுகிறோம்.பிரதமரின் கருத்துக்குப் பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி, பொய் சொல்வதே ஜே.வி.பியின் கலாசாரம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் இரத்து செய்யப்பட்டாலும், இவர்களுக்குத் தேவையான அனைத்தையும் கட்சி நிதியிலிருந்து பெற்றுக்கொள்கிறார்கள். இவர்கள் சம்பளம் பெறாமல் இருப்பதில்லை. இந்த உறுப்பினர்களின் பெயரிலேயே வங்கிக் கணக்குகள் உள்ளன. அதில் ஒரு பகுதியை மட்டுமே கட்சிக்கு அனுப்பிவிட்டு, எஞ்சிய பகுதியை அவர்கள் வைத்துக்கொள்கிறார்கள் என்பதை நான் நிரூபிப்பேன். எனக் கடுமையாகச் சாடினார்.சமிந்த விஜேசிறியின் இந்தக் கருத்துக்கு ஆளுங்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால் சபையில் சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது.