• Jul 15 2026

இலங்கையில் நண்பகலுக்குப் பின் உயர்ந்த தங்கத்தின் விலை

Chithra / Jul 14th 2026, 8:18 pm
image


உள்ளூர் சந்தையில் தங்கத்தின் விலை இன்று (14) நண்பகலுக்குப் பின்னர் உயர்வைப் பதிவு செய்துள்ளது.


அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இன்று நண்பகல் வரை 24 கரட் தங்கம் ஒரு பவுண் 374,000 ரூபாயாக விற்பனையான நிலையில், அதன் விலை 2,000 ரூபாயால் அதிகரித்து தற்போது 376,000 ரூபாயாக உயர்ந்துள்ளது.


இதன்படி, தற்போதைய சந்தை விலைப்படி 24 கரட் தங்கம் ஒரு பவுண் 376,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் 346,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.


அதேவேளை, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43,250 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.


தங்கத்தின் விலையில் தொடர்ச்சியான ஏற்ற இறக்கங்கள் காணப்படுவதால், தங்கம் வாங்கத் திட்டமிட்டுள்ளவர்கள் சந்தை விலை நிலவரத்தை கவனமாகக் கண்காணித்து வாங்குவது சிறந்தது என நகை வியாபாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இலங்கையில் நண்பகலுக்குப் பின் உயர்ந்த தங்கத்தின் விலை உள்ளூர் சந்தையில் தங்கத்தின் விலை இன்று (14) நண்பகலுக்குப் பின்னர் உயர்வைப் பதிவு செய்துள்ளது.அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இன்று நண்பகல் வரை 24 கரட் தங்கம் ஒரு பவுண் 374,000 ரூபாயாக விற்பனையான நிலையில், அதன் விலை 2,000 ரூபாயால் அதிகரித்து தற்போது 376,000 ரூபாயாக உயர்ந்துள்ளது.இதன்படி, தற்போதைய சந்தை விலைப்படி 24 கரட் தங்கம் ஒரு பவுண் 376,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் 346,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.அதேவேளை, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43,250 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.தங்கத்தின் விலையில் தொடர்ச்சியான ஏற்ற இறக்கங்கள் காணப்படுவதால், தங்கம் வாங்கத் திட்டமிட்டுள்ளவர்கள் சந்தை விலை நிலவரத்தை கவனமாகக் கண்காணித்து வாங்குவது சிறந்தது என நகை வியாபாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement