• Mar 26 2026

இலங்கையில் இன்று உச்சத்தைத் தொட்ட தங்கத்தின் விலை

Chithra / Mar 25th 2026, 12:51 pm
image

 

இலங்கையில் தங்கத்தின் விலையானது நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று (25) ஒரே நாளில் 8,000 ரூபாயால் அதிரடியாக அதிகரித்துள்ளது.


அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் இதனை அறிவித்துள்ளது.


அந்தவகையில், இலங்கையில் தற்போதைய தங்க விலை நிலவரப்படி,


24 கரட் தங்கம் பவுண் ஒன்று 393,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 361,500 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.


இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 49,125 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,188 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.


சர்வதேச சந்தையில் நிலவும் தளம்பல் நிலை மற்றும் உள்நாட்டில் தங்கத்திற்கான கேள்வி தீவிரமாக அதிகரித்துள்ளமையே இந்த விலை உயர்வுக்குக் காரணம் என நகையக வியாபாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இலங்கையில் இன்று உச்சத்தைத் தொட்ட தங்கத்தின் விலை  இலங்கையில் தங்கத்தின் விலையானது நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று (25) ஒரே நாளில் 8,000 ரூபாயால் அதிரடியாக அதிகரித்துள்ளது.அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் இதனை அறிவித்துள்ளது.அந்தவகையில், இலங்கையில் தற்போதைய தங்க விலை நிலவரப்படி,24 கரட் தங்கம் பவுண் ஒன்று 393,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 361,500 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 49,125 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,188 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.சர்வதேச சந்தையில் நிலவும் தளம்பல் நிலை மற்றும் உள்நாட்டில் தங்கத்திற்கான கேள்வி தீவிரமாக அதிகரித்துள்ளமையே இந்த விலை உயர்வுக்குக் காரணம் என நகையக வியாபாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement