• Mar 26 2026

யாழ்.பல்கலையின் துணைவேந்தராக பேராசிரியர் வேல்நம்பி இன்று கடமையேற்பு!

shanu / Mar 25th 2026, 12:48 pm
image

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக மேன்மைமிகு பேராசிரியர் திருநாவுக்கரசு வேல்நம்பி இன்று (25.03.2026)  பதவியேற்றார்.


பல்கலைக்கழக வளாகத்தினுள் அமைந்துள்ள ஸ்ரீ பார்வதி சமேத பரமேஸ்வரன் கோயிலில் நடைபெற்ற சிறப்பு அபிஷேக வழிபாட்டைத் தொடர்ந்து, அவர் காலை 9:30 மணிக்கு துணைவேந்தர் அலுவலகத்தில் தனது கடமைகளை முறைப்படி ஆரம்பித்தார். 


பதவியேற்பு விழாவில் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் நா. சண்முகலிங்கம், பேராசிரியர் எஸ்.சிறிசற்குணராசா, பதிவாளர் காண்டீபன் மற்றும் பல்கலைக்கழக சமூகத்தினர் கலந்துகொண்டு புதிய துணைவேந்தருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.


யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் வாழ்த்துகளைத் தெரிவிப்பதோடு, பல்கலைக்கழகத்தைப் புத்தாக்கம், கல்விசார் சிறப்பு மற்றும் தொடர் வளர்ச்சியை நோக்கி வழிநடத்துவதில் அவர் பெரும் வெற்றி பெறவும் வாழ்த்துகிறது எனப் பதிவிட்டுள்ளது. 


இதுவரை காலமும் துணைவேந்தராகக் கடமையாற்றிய பேராசிரியர் சிறிசற்குணராசாவின் பதவிக்காலம் நிறைவடைந்தததையடுத்து துணைவேந்தர் பதவிக்காகப் போட்டியிட்டு தற்போது புதிய துணைவேந்தராக பேராசிரியர் திருநாவுக்கரசு வேல்நம்பி கடமையேற்றுள்ளார். 


புதிய துணைவேந்தராகப் பதவியேற்ற பேராசிரியர் திருநாவுக்கரசு வேல்நம்பிக்கு கல்விச்சமூகம் உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

யாழ்.பல்கலையின் துணைவேந்தராக பேராசிரியர் வேல்நம்பி இன்று கடமையேற்பு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக மேன்மைமிகு பேராசிரியர் திருநாவுக்கரசு வேல்நம்பி இன்று (25.03.2026)  பதவியேற்றார்.பல்கலைக்கழக வளாகத்தினுள் அமைந்துள்ள ஸ்ரீ பார்வதி சமேத பரமேஸ்வரன் கோயிலில் நடைபெற்ற சிறப்பு அபிஷேக வழிபாட்டைத் தொடர்ந்து, அவர் காலை 9:30 மணிக்கு துணைவேந்தர் அலுவலகத்தில் தனது கடமைகளை முறைப்படி ஆரம்பித்தார். பதவியேற்பு விழாவில் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் நா. சண்முகலிங்கம், பேராசிரியர் எஸ்.சிறிசற்குணராசா, பதிவாளர் காண்டீபன் மற்றும் பல்கலைக்கழக சமூகத்தினர் கலந்துகொண்டு புதிய துணைவேந்தருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் வாழ்த்துகளைத் தெரிவிப்பதோடு, பல்கலைக்கழகத்தைப் புத்தாக்கம், கல்விசார் சிறப்பு மற்றும் தொடர் வளர்ச்சியை நோக்கி வழிநடத்துவதில் அவர் பெரும் வெற்றி பெறவும் வாழ்த்துகிறது எனப் பதிவிட்டுள்ளது. இதுவரை காலமும் துணைவேந்தராகக் கடமையாற்றிய பேராசிரியர் சிறிசற்குணராசாவின் பதவிக்காலம் நிறைவடைந்தததையடுத்து துணைவேந்தர் பதவிக்காகப் போட்டியிட்டு தற்போது புதிய துணைவேந்தராக பேராசிரியர் திருநாவுக்கரசு வேல்நம்பி கடமையேற்றுள்ளார். புதிய துணைவேந்தராகப் பதவியேற்ற பேராசிரியர் திருநாவுக்கரசு வேல்நம்பிக்கு கல்விச்சமூகம் உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement