• Sep 15 2025

அமெரிக்கா - ஜப்பானில் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ள ஜனாதிபதி! விரைவில் பயணம்

Chithra / Sep 14th 2025, 3:11 pm
image


ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக செப்டம்பர் 22 ஆம் திகதி அமெரிக்காவிற்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

தனது பயணத்தின் போது, ​​ஜனாதிபதி பல நாட்டுத் தலைவர்கள் மற்றும் அரச அதிகாரிகளுடன் இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளதோடு, மேலும் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸையும் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் தனது பணிகளை முடித்த பின்னர், ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், செப்டம்பர் 26 ஆம் திகதி ஜப்பானுக்கு அரச முறைப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

ஜப்பானில் இருக்கும் போது, ​​இந்த மாதம் 27 ஆம் திகதி  இடம்பெறவுள்ள சர்வதேச வர்த்தக கண்காட்சியில் கலந்து கொண்டு, சிரேஷ்ட ஜப்பானிய அதிகாரிகளுடன் உயர் மட்ட கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா - ஜப்பானில் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ள ஜனாதிபதி விரைவில் பயணம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக செப்டம்பர் 22 ஆம் திகதி அமெரிக்காவிற்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தனது பயணத்தின் போது, ​​ஜனாதிபதி பல நாட்டுத் தலைவர்கள் மற்றும் அரச அதிகாரிகளுடன் இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளதோடு, மேலும் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸையும் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவில் தனது பணிகளை முடித்த பின்னர், ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், செப்டம்பர் 26 ஆம் திகதி ஜப்பானுக்கு அரச முறைப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.ஜப்பானில் இருக்கும் போது, ​​இந்த மாதம் 27 ஆம் திகதி  இடம்பெறவுள்ள சர்வதேச வர்த்தக கண்காட்சியில் கலந்து கொண்டு, சிரேஷ்ட ஜப்பானிய அதிகாரிகளுடன் உயர் மட்ட கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement