முல்லைத்தீவு மாவட்டத்தின் நகரப்பகுதியில் அமைந்துள்ள கரைதுறைப்பற்று பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் "மெகா கோப் சிற்ரி" கடந்த வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்படிருந்தது.
குறித்த அங்காடியினை மீள் புனர்நிர்மாணிப்பது தொடர்பில் மாவட்ட அரச அதிபர் அ.உமாமகேஸ்வரனின் முன்மொழிவில் தீர்மானிக்கப்பட்டது.
குறித்த "மெகா கோப் சிற்ரி" அரச அதிபர் மேற்கொண்ட ஏற்பாட்டிலும் வழிகாட்டலிலும் 30 லட்சம் ரூபாய் பெறுமதியில் புதுப்பொலிவுடன் புனரமைக்கப்பட்டு இன்றைய தினம்(11) முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவரும் கூட்டுறவு பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க திறந்து வைக்கப்பட்டது.
மாவட்ட செயலகத்தின் அபிவிருத்தி நிதியில் இருந்து 1.45 மில்லியன் ரூபாய் நிதியிலும் கூட்டுறவுத் திணைக்களத்தின் 5.5 லட்சம் ரூபாய் நிதி உதவியிலும் கூட்டுறவுத் அபிவிருத்தி திணைக்களத்தின் கடனில் இருந்து ஒரு மில்லியன் ரூபாயும் நிதிகளாக கிடைக்கப் பெற்று குறித்த அங்காடி புனரமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
குறித்த திறப்பு விழா நிகழ்வில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், செல்லத்தம்பி திலகநாதன், முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய கூட்டுறவு உதவி ஆணையாளர், கூட்டுறவு திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் முதலானோர் கலந்து சிறப்பித்தனர்.
கரைதுறைப்பற்று பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் சிறப்பு அங்காடி திறந்து வைப்பு முல்லைத்தீவு மாவட்டத்தின் நகரப்பகுதியில் அமைந்துள்ள கரைதுறைப்பற்று பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் "மெகா கோப் சிற்ரி" கடந்த வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்படிருந்தது.குறித்த அங்காடியினை மீள் புனர்நிர்மாணிப்பது தொடர்பில் மாவட்ட அரச அதிபர் அ.உமாமகேஸ்வரனின் முன்மொழிவில் தீர்மானிக்கப்பட்டது.குறித்த "மெகா கோப் சிற்ரி" அரச அதிபர் மேற்கொண்ட ஏற்பாட்டிலும் வழிகாட்டலிலும் 30 லட்சம் ரூபாய் பெறுமதியில் புதுப்பொலிவுடன் புனரமைக்கப்பட்டு இன்றைய தினம்(11) முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவரும் கூட்டுறவு பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க திறந்து வைக்கப்பட்டது. மாவட்ட செயலகத்தின் அபிவிருத்தி நிதியில் இருந்து 1.45 மில்லியன் ரூபாய் நிதியிலும் கூட்டுறவுத் திணைக்களத்தின் 5.5 லட்சம் ரூபாய் நிதி உதவியிலும் கூட்டுறவுத் அபிவிருத்தி திணைக்களத்தின் கடனில் இருந்து ஒரு மில்லியன் ரூபாயும் நிதிகளாக கிடைக்கப் பெற்று குறித்த அங்காடி புனரமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.குறித்த திறப்பு விழா நிகழ்வில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், செல்லத்தம்பி திலகநாதன், முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய கூட்டுறவு உதவி ஆணையாளர், கூட்டுறவு திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் முதலானோர் கலந்து சிறப்பித்தனர்.