தியாக தீபம் திலீபனின் சிலை அகற்றப்பட்டமையைக் கண்டித்தும், அந்தச் சிலையை மீள அவ்விடத்தில் வைக்குமாறு வலியுறுத்தியும் யாழ். நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவாலயத்துக்கு முன்பாக இடம்பெற்று வரும் அமைதி வழிப் போராட்டம் இன்று வெள்ளிக்கிழமை மாலையுடன் தற்காலிகமாக நிறைவுக்கு வருகின்றது.
நல்லூர் பின்வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் வைக்கப்பட்டு நினைவேந்தல் மேற்கொள்ளப்பட்டு வந்த அவரது சிலையானது கடந்த மாதம் 27ஆம் திகதி முற்பகல் 6:30 மணியளவில் பொலிஸாரால் அகற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதற்கு எதிராக 'அணையா விளக்கு' ஏற்றப்பட்டு அமைதி வழிப் போராட்டம் நேற்றுமுன்தினம் புதன்கிழமை மாலை 5 மணிக்குத் தொடங்கியது. இதன் இரண்டாம் நாள் போராட்டம் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது.
இந்தப் போராட்டத்தில் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் உட்படப் பலரும் கலந்துகொண்டனர்.
இந்தப் போராட்டம் இன்று மாலையுடன் தற்காலிகமாக நிறைவுக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது
தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்துக்கு முன்பாகத் தொடரும் அமைதி வழிப் போராட்டம் தியாக தீபம் திலீபனின் சிலை அகற்றப்பட்டமையைக் கண்டித்தும், அந்தச் சிலையை மீள அவ்விடத்தில் வைக்குமாறு வலியுறுத்தியும் யாழ். நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவாலயத்துக்கு முன்பாக இடம்பெற்று வரும் அமைதி வழிப் போராட்டம் இன்று வெள்ளிக்கிழமை மாலையுடன் தற்காலிகமாக நிறைவுக்கு வருகின்றது.நல்லூர் பின்வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் வைக்கப்பட்டு நினைவேந்தல் மேற்கொள்ளப்பட்டு வந்த அவரது சிலையானது கடந்த மாதம் 27ஆம் திகதி முற்பகல் 6:30 மணியளவில் பொலிஸாரால் அகற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.இதற்கு எதிராக 'அணையா விளக்கு' ஏற்றப்பட்டு அமைதி வழிப் போராட்டம் நேற்றுமுன்தினம் புதன்கிழமை மாலை 5 மணிக்குத் தொடங்கியது. இதன் இரண்டாம் நாள் போராட்டம் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது.நேற்று முற்பகல் 9 மணியளவிலும், பிற்பகல் 5 மணியளவிலும் தியாக தீபத்தின் நினைவுத்தூபியில் மலர் தூவி வணக்கம் செலுத்தப்பட்டது.இந்தப் போராட்டத்தில் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் உட்படப் பலரும் கலந்துகொண்டனர்.இந்தப் போராட்டம் இன்று மாலையுடன் தற்காலிகமாக நிறைவுக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது