• Sep 24 2026

கூரை மீது சூரிய மின் உற்பத்தித் துறைக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் - ஜனாதிபதிக்கு பறந்த கடிதம்

Chithra / Sep 24th 2026, 11:05 am
image


இலங்கையின் கூரை மீது சூரிய மின் உற்பத்தி (Roof Top Solar) மற்றும் மின்கல சேமிப்புத் துறைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து சுட்டிக்காட்டி, இலங்கை தேசிய வர்த்தக சம்மேளனம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.


‘இலங்கையின் கூரை மீது சூரிய மின் உற்பத்தித் துறைக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்’ என்ற தலைப்பில் அனுப்பப்பட்டுள்ள குறித்த கடிதத்தில், தேசிய மின்சக்தி பாதுகாப்பு மற்றும் பொருளாதார மீட்சியை பாதிக்கக்கூடிய இரு முக்கிய கொள்கை ரீதியான பிரச்சினைகள் தொடர்பில் உடனடி தலையீடு மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) மற்றும் தேசிய அமைப்புகள் இயக்கி (NSO) உள்ளிட்ட நிறுவனங்கள் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ கணிப்புகளின் அடிப்படையில், 2027ஆம் ஆண்டின் முற்பகுதியில் 450 மெகாவாட் மணித்தியாலம் (MWh) வரையான மின் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் காணப்படுவதாக அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


இந்த நிலையில், கூரை மீது சூரிய மின் உற்பத்தி கட்டமைப்புகள் மற்றும் மின்கல சேமிப்பு அமைப்புகளை (RTSPV) விரைவாக விரிவுபடுத்துவது, எதிர்கால மின் நெருக்கடியை குறைப்பதற்கான நடைமுறைச் சாத்தியமான தீர்வாக அமையும் என தேசிய வர்த்தக சம்மேளனம் தெரிவித்துள்ளது.


எனினும், அண்மையில் வெளியிடப்பட்டுள்ள சில கொள்கை வழிகாட்டல்கள், தேசிய மின்சாரக் கட்டமைப்புக்கு முக்கிய பங்களிப்பை வழங்கக்கூடிய இந்தத் துறையின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கே அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாகவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தற்போதைய கூரை மீது சூரிய மின் உற்பத்தி மற்றும் மின்கல சேமிப்புத் துறை தேசிய மின்சாரக் கட்டமைப்புக்கு சுமார் 2,600 மெகாவாட் கொள்ளளவை பங்களிப்பதாகவும், இறக்குமதி செய்யப்படும் புதைபடிவ எரிபொருட்களுக்காக செலவிடப்படும் தொகையில் மாதாந்தம் சுமார் 20.4 பில்லியன் ரூபாயை சேமிக்க உதவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இவ்வாறான முக்கிய பங்களிப்பை வழங்கி வரும் நிலையில், குறித்த துறை தற்போது பல்வேறு ஒழுங்குமுறை தடைகளை எதிர்கொண்டு வருவதாகவும் தேசிய வர்த்தக சம்மேளனம் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது.

கூரை மீது சூரிய மின் உற்பத்தித் துறைக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் - ஜனாதிபதிக்கு பறந்த கடிதம் இலங்கையின் கூரை மீது சூரிய மின் உற்பத்தி (Roof Top Solar) மற்றும் மின்கல சேமிப்புத் துறைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து சுட்டிக்காட்டி, இலங்கை தேசிய வர்த்தக சம்மேளனம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.‘இலங்கையின் கூரை மீது சூரிய மின் உற்பத்தித் துறைக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்’ என்ற தலைப்பில் அனுப்பப்பட்டுள்ள குறித்த கடிதத்தில், தேசிய மின்சக்தி பாதுகாப்பு மற்றும் பொருளாதார மீட்சியை பாதிக்கக்கூடிய இரு முக்கிய கொள்கை ரீதியான பிரச்சினைகள் தொடர்பில் உடனடி தலையீடு மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) மற்றும் தேசிய அமைப்புகள் இயக்கி (NSO) உள்ளிட்ட நிறுவனங்கள் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ கணிப்புகளின் அடிப்படையில், 2027ஆம் ஆண்டின் முற்பகுதியில் 450 மெகாவாட் மணித்தியாலம் (MWh) வரையான மின் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் காணப்படுவதாக அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இந்த நிலையில், கூரை மீது சூரிய மின் உற்பத்தி கட்டமைப்புகள் மற்றும் மின்கல சேமிப்பு அமைப்புகளை (RTSPV) விரைவாக விரிவுபடுத்துவது, எதிர்கால மின் நெருக்கடியை குறைப்பதற்கான நடைமுறைச் சாத்தியமான தீர்வாக அமையும் என தேசிய வர்த்தக சம்மேளனம் தெரிவித்துள்ளது.எனினும், அண்மையில் வெளியிடப்பட்டுள்ள சில கொள்கை வழிகாட்டல்கள், தேசிய மின்சாரக் கட்டமைப்புக்கு முக்கிய பங்களிப்பை வழங்கக்கூடிய இந்தத் துறையின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கே அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாகவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.தற்போதைய கூரை மீது சூரிய மின் உற்பத்தி மற்றும் மின்கல சேமிப்புத் துறை தேசிய மின்சாரக் கட்டமைப்புக்கு சுமார் 2,600 மெகாவாட் கொள்ளளவை பங்களிப்பதாகவும், இறக்குமதி செய்யப்படும் புதைபடிவ எரிபொருட்களுக்காக செலவிடப்படும் தொகையில் மாதாந்தம் சுமார் 20.4 பில்லியன் ரூபாயை சேமிக்க உதவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறான முக்கிய பங்களிப்பை வழங்கி வரும் நிலையில், குறித்த துறை தற்போது பல்வேறு ஒழுங்குமுறை தடைகளை எதிர்கொண்டு வருவதாகவும் தேசிய வர்த்தக சம்மேளனம் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement