திருகோணமலை கரையோர மீனவர்களின் கடலரிப்பு பிரச்சினை தீர்க்கப்பட்டு நிரந்தர தீர்வு வழங்க வேண்டும் என திருகோணமலை மாநகர சபையின் விசேட சபை அமர்வின் போது பிரேரனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
குறித்த விசேட சபை அமர்வானது திருகோணமலை மாநகர முதல்வர் க.செல்வராசா தலைமையில் (14) இடம் பெற்ற போதே மூன்று உறுப்பினர்கள் இது குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டும் எனவும் பிரேரனைகளை முன்வைத்து உரையாற்றினர்.
திருகோணமலை மாநகர எல்லைக்குட்பட்ட கரையோர மீனவக் கிராமங்களான மனையாவெளி,பெருந்தெரு,வீரநகர்,திருக்டலூர்,பள்ளத்தோட்டம்,ஜமாலியா,விஜித புர போன்ற கரையோர பகுதிகளை உள்ளடக்கிய மக்கள் கடல் அரிப்பு காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அனர்த்தங்களுக்கு முகங்கொடுக்கும் மக்களை பாதுகாக்க வேண்டும். இதற்காக விசேடமாக குழுவொன்றை அமைத்தும் விசேட பிரச்சினையாக கொண்டு வெளிநாட்டு உதவிகளை திரட்டி இதனை பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறான பிரச்சினைகளுக்கு முக்கிய காரணமாக மணல் அகழ்வும் காரணமாகவுள்ளது. தினமும் கடல் தொழில் செய்தே ஜீவனோபாயத்தை கொண்டு செல்ல வேண்டியுள்ளது.
கடல் அரிப்பை பாதுகாக்க நிரந்தரமான தீர்வை முன்வைக்க வேண்டும். கரையோர தடுப்பு சுவர் கட்டாயமாக அப்பகுதிகளில் அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்கள்.
திருகோணமலை கரையோர மீனவர்களின் கடலரிப்பு பிரச்சினை தீர்க்கப்பட்டு நிரந்தர தீர்வு வழங்க வேண்டும் - மாநகரசபை அமர்வில் பிரேரணை திருகோணமலை கரையோர மீனவர்களின் கடலரிப்பு பிரச்சினை தீர்க்கப்பட்டு நிரந்தர தீர்வு வழங்க வேண்டும் என திருகோணமலை மாநகர சபையின் விசேட சபை அமர்வின் போது பிரேரனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.குறித்த விசேட சபை அமர்வானது திருகோணமலை மாநகர முதல்வர் க.செல்வராசா தலைமையில் (14) இடம் பெற்ற போதே மூன்று உறுப்பினர்கள் இது குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டும் எனவும் பிரேரனைகளை முன்வைத்து உரையாற்றினர்.திருகோணமலை மாநகர எல்லைக்குட்பட்ட கரையோர மீனவக் கிராமங்களான மனையாவெளி,பெருந்தெரு,வீரநகர்,திருக்டலூர்,பள்ளத்தோட்டம்,ஜமாலியா,விஜித புர போன்ற கரையோர பகுதிகளை உள்ளடக்கிய மக்கள் கடல் அரிப்பு காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்தங்களுக்கு முகங்கொடுக்கும் மக்களை பாதுகாக்க வேண்டும். இதற்காக விசேடமாக குழுவொன்றை அமைத்தும் விசேட பிரச்சினையாக கொண்டு வெளிநாட்டு உதவிகளை திரட்டி இதனை பாதுகாக்க வேண்டும். இவ்வாறான பிரச்சினைகளுக்கு முக்கிய காரணமாக மணல் அகழ்வும் காரணமாகவுள்ளது. தினமும் கடல் தொழில் செய்தே ஜீவனோபாயத்தை கொண்டு செல்ல வேண்டியுள்ளது. கடல் அரிப்பை பாதுகாக்க நிரந்தரமான தீர்வை முன்வைக்க வேண்டும். கரையோர தடுப்பு சுவர் கட்டாயமாக அப்பகுதிகளில் அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்கள்.