• Jul 13 2026

ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டது! அமெரிக்கா–ஈரான் மோதல் தீவிரம்

Chithra / Jul 12th 2026, 11:27 am
image


ஹோர்முஸ் நீரிணை வழியாகச் சென்ற வணிகக் கப்பல் ஒன்றின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, அமெரிக்கா ஈரான் இலக்குகள் மீது புதிய கட்டத் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளதாக அறிவித்துள்ளது.


அங்கீகரிக்கப்பட்ட கடற்பாதையில் இருந்து விலகிச் சென்றதுடன், கப்பலின் கண்காணிப்பு அமைப்புகளும் அணைக்கப்பட்டிருந்ததாகக் கூறி, ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை அந்தக் கப்பலைத் தாக்கியதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


இதனையடுத்து, மறு அறிவிப்பு வரும் வரை ஹோர்முஸ் நீரிணை மூடப்படுவதாக ஈரான் அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை சர்வதேச கப்பல் போக்குவரத்து மற்றும் உலக எரிசக்தி விநியோகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் எனக் கருதப்படுகிறது.


சைப்ரஸ் நாட்டைச் சேர்ந்த கப்பல் மீது ஈரான் வெளிப்படையான தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, "இந்த வாரத்தின் மூன்றாவது சுற்றுத் தாக்குதலை" மேற்கொண்டுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளை மையம் (CENTCOM) தெரிவித்துள்ளது.


இந்தத் தாக்குதலில் கப்பலின் இயந்திர அறை கடுமையாக சேதமடைந்ததால், அது தனது பயணத்தைத் தொடர முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும், ஒரு மாலுமி காணாமல் போயுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலாளர் பீட் ஹெக்செத், வணிகக் கப்பல்கள் மீதான முந்தைய தாக்குதல்களுக்கு ஈரான் பொறுப்பேற்க வேண்டும் என்று பலமுறை எச்சரிக்கப்பட்ட போதிலும், மீண்டும் அதே நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தனது சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.


"ஈரான் தவறான முடிவை எடுத்துள்ளது; அதன் விளைவுகளை இப்போது எதிர்கொள்கிறது" என்றும் அவர் எச்சரித்துள்ளார்.


மறுபுறம், வணிகக் கப்பல் மீது எச்சரிக்கையாக ஏவுகணை செலுத்தியதாகவும், பலமுறை எச்சரித்தும் உத்தரவைப் பின்பற்றாததால் அந்தக் கப்பல் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் ஈரான் தரப்பு விளக்கம் அளித்துள்ளது.


அதேவேளை, ஹோர்முஸ் நீரிணையை மூடியுள்ள நிலையில், அமெரிக்கா மேற்கொள்ளும் எந்தவொரு "ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கும்" கடுமையான பதிலடி வழங்கப்படும் என்றும், பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் இலக்காகக் கொள்ளப்படும் என்றும் ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.


ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டது அமெரிக்கா–ஈரான் மோதல் தீவிரம் ஹோர்முஸ் நீரிணை வழியாகச் சென்ற வணிகக் கப்பல் ஒன்றின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, அமெரிக்கா ஈரான் இலக்குகள் மீது புதிய கட்டத் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளதாக அறிவித்துள்ளது.அங்கீகரிக்கப்பட்ட கடற்பாதையில் இருந்து விலகிச் சென்றதுடன், கப்பலின் கண்காணிப்பு அமைப்புகளும் அணைக்கப்பட்டிருந்ததாகக் கூறி, ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை அந்தக் கப்பலைத் தாக்கியதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.இதனையடுத்து, மறு அறிவிப்பு வரும் வரை ஹோர்முஸ் நீரிணை மூடப்படுவதாக ஈரான் அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை சர்வதேச கப்பல் போக்குவரத்து மற்றும் உலக எரிசக்தி விநியோகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் எனக் கருதப்படுகிறது.சைப்ரஸ் நாட்டைச் சேர்ந்த கப்பல் மீது ஈரான் வெளிப்படையான தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, "இந்த வாரத்தின் மூன்றாவது சுற்றுத் தாக்குதலை" மேற்கொண்டுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளை மையம் (CENTCOM) தெரிவித்துள்ளது.இந்தத் தாக்குதலில் கப்பலின் இயந்திர அறை கடுமையாக சேதமடைந்ததால், அது தனது பயணத்தைத் தொடர முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும், ஒரு மாலுமி காணாமல் போயுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலாளர் பீட் ஹெக்செத், வணிகக் கப்பல்கள் மீதான முந்தைய தாக்குதல்களுக்கு ஈரான் பொறுப்பேற்க வேண்டும் என்று பலமுறை எச்சரிக்கப்பட்ட போதிலும், மீண்டும் அதே நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தனது சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்."ஈரான் தவறான முடிவை எடுத்துள்ளது; அதன் விளைவுகளை இப்போது எதிர்கொள்கிறது" என்றும் அவர் எச்சரித்துள்ளார்.மறுபுறம், வணிகக் கப்பல் மீது எச்சரிக்கையாக ஏவுகணை செலுத்தியதாகவும், பலமுறை எச்சரித்தும் உத்தரவைப் பின்பற்றாததால் அந்தக் கப்பல் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் ஈரான் தரப்பு விளக்கம் அளித்துள்ளது.அதேவேளை, ஹோர்முஸ் நீரிணையை மூடியுள்ள நிலையில், அமெரிக்கா மேற்கொள்ளும் எந்தவொரு "ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கும்" கடுமையான பதிலடி வழங்கப்படும் என்றும், பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் இலக்காகக் கொள்ளப்படும் என்றும் ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement