மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு இதுவரையில் எவ்வித நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை. இவ்விடயத்தில் அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடன் செயற்படவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
சுதந்திரத்துக்கு பின்னரான காலப்பகுதியில் ஆட்சியில் இருந்த சகல அரசாங்கங்களும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதை விடுத்து பிரச்சினைகளை தீவிரப்படுத்தும் வகையில் தான் செயற்பட்டன.
தேர்தல் முறைமை காரணமாக மாகாணசபைத் தேர்தல் பல ஆண்டுகாலமாக காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது.
மாகாண சபைத் தேர்தலை பழைய தேர்தல் முறையில் நடத்துவதா அல்லது புதிய தேர்தல் முறையில் நடத்துவதா என்பது பாரியதொரு பிரச்சினையாக காணப்படுகிறது.
இந்த பிரச்சினைக்கு பாராளுமன்றத்தின் ஊடாக தீர்வு காண வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தொடர்ச்சியாக வலியுறுத்துகின்ற நிலையில் இதுவரையில் உரிய தீர்வுகள் ஏதும் எட்டப்படவில்லை.
மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக குறிப்பிட்டுக் கொண்டு அரசாங்கம் நாட்டு மக்களை ஏமாற்றுகிறது.
இவ்விடயத்தில் அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடன் செயற்படவில்லை. மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குரிய சாதகமான சூழல் தற்போது தோற்றம் பெற்றுள்ளது.
இதனை அரசாங்கம் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தேர்தலை வெகுவிரைவில் நடத்த வேண்டும். என்றார்.
மாகாண சபைத் தேர்தலில் அரசு வெளிப்படைத்தன்மையின்றி மக்களை ஏமாற்றுகிறது – எதிர்க்கட்சி குற்றச்சாட்டு மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு இதுவரையில் எவ்வித நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை. இவ்விடயத்தில் அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடன் செயற்படவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.ஊடகங்களுக்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,சுதந்திரத்துக்கு பின்னரான காலப்பகுதியில் ஆட்சியில் இருந்த சகல அரசாங்கங்களும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதை விடுத்து பிரச்சினைகளை தீவிரப்படுத்தும் வகையில் தான் செயற்பட்டன.தேர்தல் முறைமை காரணமாக மாகாணசபைத் தேர்தல் பல ஆண்டுகாலமாக காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது.மாகாண சபைத் தேர்தலை பழைய தேர்தல் முறையில் நடத்துவதா அல்லது புதிய தேர்தல் முறையில் நடத்துவதா என்பது பாரியதொரு பிரச்சினையாக காணப்படுகிறது.இந்த பிரச்சினைக்கு பாராளுமன்றத்தின் ஊடாக தீர்வு காண வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தொடர்ச்சியாக வலியுறுத்துகின்ற நிலையில் இதுவரையில் உரிய தீர்வுகள் ஏதும் எட்டப்படவில்லை.மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக குறிப்பிட்டுக் கொண்டு அரசாங்கம் நாட்டு மக்களை ஏமாற்றுகிறது.இவ்விடயத்தில் அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடன் செயற்படவில்லை. மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குரிய சாதகமான சூழல் தற்போது தோற்றம் பெற்றுள்ளது.இதனை அரசாங்கம் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தேர்தலை வெகுவிரைவில் நடத்த வேண்டும். என்றார்.