கிழக்கு இலங்கையில் பிரசித்தி பெற்ற சிவன் ஆலயங்களில் ஒன்றான திருப்பழுகாமம் கேதீஸ்வரர் சிவன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் கொடியேற்றத் திருவிழா திங்கட்கிழமை(23) நண்பகல் பக்தர்களின் அரோகரா கோசத்திற்கு மத்தியில் பக்திபூர்வமாக இடம்பெற்றுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் முதலாவது வருடாந்த உத்சவம் இடம்பெறும் சிவன் ஆலயங்களில் ஒன்றாகக் கருதப்படும் இவ்வாலயத்தில் 10 நாட்கள் திருவிழா இடம்பெற உள்ளது
கண்டி சிவ முத்து மாரியம்மன் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ கு. ஜநேந்திர ராஜ குருக்கள் தலைமையில் வருந்தட உத்சவ கிரிகைகள் இடம் பெறுகின்றன
எதிர்வரும் 29 ஆம் திகதி அன்று மாம்பழத் திருவிழாவும் 30 ஆம் திகதி அன்று திருவேட்டை திருவிழாவும் 31 ஆம் திகதி அன்று முத்துச் சப்புர திருவிழாவும் இடம்பெற்று, 01.04.2026 அன்று இறுதி 10 ஆம் நாள் தீதோற்சவமும் இடம்பெற உள்ளது.
தீர்த்தோற்சவ தினத்தன்று மாலை கொடி இறக்கம் இடம்பெற்று வைரவர் பூசையுடன் இவ்வாலயத்தின் வருடாந்த உற்சவம் நிறைவடைய உள்ளது.
இவ்வாலயத்தின் திருவிழா காலங்களில் தினசரி பஜனை நிகழ்வுகள் சமய சொற்பொழிவுகள் மற்றும் கலை கலாசார நிகழ்வுகள் என்பனவும் இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
திருப்பழுகாமம் கேதீஸ்வரர் சிவன் ஆலயத்தின் வருடாந்த கொடியேற்ற திருவிழா கிழக்கு இலங்கையில் பிரசித்தி பெற்ற சிவன் ஆலயங்களில் ஒன்றான திருப்பழுகாமம் கேதீஸ்வரர் சிவன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் கொடியேற்றத் திருவிழா திங்கட்கிழமை(23) நண்பகல் பக்தர்களின் அரோகரா கோசத்திற்கு மத்தியில் பக்திபூர்வமாக இடம்பெற்றுள்ளது.கிழக்கு மாகாணத்தில் முதலாவது வருடாந்த உத்சவம் இடம்பெறும் சிவன் ஆலயங்களில் ஒன்றாகக் கருதப்படும் இவ்வாலயத்தில் 10 நாட்கள் திருவிழா இடம்பெற உள்ளதுகண்டி சிவ முத்து மாரியம்மன் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ கு. ஜநேந்திர ராஜ குருக்கள் தலைமையில் வருந்தட உத்சவ கிரிகைகள் இடம் பெறுகின்றன எதிர்வரும் 29 ஆம் திகதி அன்று மாம்பழத் திருவிழாவும் 30 ஆம் திகதி அன்று திருவேட்டை திருவிழாவும் 31 ஆம் திகதி அன்று முத்துச் சப்புர திருவிழாவும் இடம்பெற்று, 01.04.2026 அன்று இறுதி 10 ஆம் நாள் தீதோற்சவமும் இடம்பெற உள்ளது.தீர்த்தோற்சவ தினத்தன்று மாலை கொடி இறக்கம் இடம்பெற்று வைரவர் பூசையுடன் இவ்வாலயத்தின் வருடாந்த உற்சவம் நிறைவடைய உள்ளது.இவ்வாலயத்தின் திருவிழா காலங்களில் தினசரி பஜனை நிகழ்வுகள் சமய சொற்பொழிவுகள் மற்றும் கலை கலாசார நிகழ்வுகள் என்பனவும் இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.