• May 19 2025

மொட்டுக் கட்சியுடன் கூட்டு சேரும் சஜித் தரப்பு- கஜேந்திரகுமார் காட்டம்..!

Sharmi / May 19th 2025, 12:12 pm
image

தமிழ் மக்கள் ஏற்க முடியாத மொட்டுக் கட்சியான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் சஜித் பிரேமதாசாவின் ஐக்கிய மக்கள் கட்சி இணைந்து உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பதற்காக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

எனவே ஐக்கிய மக்கள் சக்தி தொடர்பாக  தமிழ் மக்கள் ஆழமாக யோசிக்க அதேவேளை தெற்கில் இருக்க கூடிய சாதாரண மக்களின் விருப்பத்தை மீறுகின்ற, துஸ்பிரயோகம் செய்யும் வகையில் தமிழ் கட்சிகள் உடந்தையாக இருக்க வேண்டும் கூடாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பொ. கஜேந்திரகுமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு வவுணதீவு நரிப்புதோட்டம் பிரதேசத்தில் மே 18 முள்ளிவாய்கால் இன அழிப்பு நினைவேந்தல் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி வவுணதீவு பிரதேச அமைப்பாளர் செல்வகுமார் தலைமையில் இடம்பெற்றது.

இதில் நா.உ. பொ.கஜேந்திரகுமார் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் பொதுமக்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு பொதுச்சுடர் ஏற்றி மலர் தூவி உயிர் நீத்தவர்களுக்கு 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே கஜேந்திரகுமார் இவ்வாறு தெரிவித்தார்.

விசேடமாக உள்ளூராட்சி சபைகளில் கூட்டாக செயற்பட்டு ஆட்சி அமைப்பதற்காக எங்களிடம் முதல் எதிரணியில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன.

நடைபெறுவது கூட தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கே தமிழ் தேசிய பேரவைக்கே அழைப்பிதழ் எதுவும் விடுவிக்கப்படவில்லை

இதற்கு முன்னர் ரணில் விக்;கிரமசிங்கவின் ஏற்பாட்டில் பேச்சுவார்த்தை சுற்று நடைபெற்றது. ஆனால் இரண்டாம் கட்டமாக ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனை கட்சிக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது

ரணில் விக்கிரமசிங்க பேச்சுவார்த்தைகளை நடாத்த நாங்கள் அது தவறு என கருத்தை தெரிவித்தோம். உண்மையில் இரண்டாவது கட்சியாக தெற்கிலே ஐக்கிய மக்கள் சக்திக்கு மக்கள் வாக்களித்துள்ளனர்.

அதனடிப்படையில் தேசிய மக்கள் சக்தி விரும்பி செய்திருக்கின்றதே தவிர வேறு ஒரு தரப்பு அதற்கு முந்துவது பொருத்தமில்லை எங்கள் பார்வை.

எனவே தேசிய மக்கள் சக்தி ஸ்ரீ லங்கா பொதுஜன பொரமுனை அழைத்திருப்பது எங்களுக்கு ஒரு பலத்த மாற்றம் ஏன் என்றால் தெற்கிலே ஒரு அறம் இல்லாத அரசியல் நடக்கின்றதா என்றவளுக்கு கேள்வி கேட்க வேண்டியுள்ளது, ரணில் விக்கிரமசிங்க மொட்டுக்கட்சியுடன் சேர்ந்து ஆட்சி அமைத்தபோது ஜக்கிய மக்கள் சத்தி, தேசிய மக்கள் சக்தி, எங்கள் போன்ற கட்சிகள் உறுதியா அதனை எதிர்த்தோம்.

அந்த வகையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனை கட்சிகள் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையாக வைத்திருக்கும் அவ்வகையான பெரும்பான்மையை கொண்ட கட்சிகளுடன் தாங்கள் போய் ஜனாதிபதி பிரதமர் பதவியை ஏற்கமுடியாது என்ற வகையில் ஜக்கிய மக்கள் சக்தி அன்று பேசினார்.

அவ்வாறு பேசியதற்கான முக்கிய காரணம் அந்தளவுக்கு மொட்டு தரப்பு ஊழல் செய்தது மக்களால் வெறுக்கப்பட வேண்டிய நிராகரிக்கப்பட வேண்டியவர்கள் அவர்களுக்கு எதிராக ஒழுக்க காற்று நடவடிக்கை பாயவேண்டும் என பேசியவர்கள் இன்று ஆட்சியமைப்பதற்காக அதே மொட்டுக்கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது எங்களைப் பொறுத்தவரையில் இந்த மக்கள் இன்னும் விரட்டி நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

அதேவேளை தேசிய மக்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் இன்று அவர்களது வாக்கு வங்கியில் அரைவாசி 6 மாதத்தில் குறைந்துள்ளது.

எனவே அதற்கு மாற்றாக வளரக்கூடிய ஜக்கிய மக்கள் சக்தி எந்த விதமான அறவும் இல்லாமல் நடந்து கொள்ளும் வகையில் மொட்டுகட்சியை அழைத்து ஆட்சியமைக்க பேசுவது தென் இலங்கையில் இருக்க கூடிய மக்களது அரசியல் அபிலாசைகள் மிகப் பெரும் கேள்விக்குறியாக மாறும்.

எனவே தமிழ் கட்சிகள் தெற்கில் இருக்க கூடிய சாதாரண மக்களின் விருப்பத்தை மீறுகின்ற வகையிலே அதனை துஸ்பிரயோகம் செய்யும் வகையில் நாங்கள் உடந்தையாக இருக்க கூடாது எங்களுக்கு ஒரு இனப்பிரச்சனை இருக்கு அது தீர்க்கப்படவேண்டும் அதற்கு தெற்கில் இருக்கின்ற சிங்கள மக்களின் ஆதரவு தேவை எனவே அவர்களுக்குத் தேவைப்படுகின்ற விடையங்களில் அவர்களின் நம்பிக்கையை இழக்க நேரிடும் வகையில் அவர்களுடைய விவகாரங்களில் தமிழ் மக்கள் நடந்து கொள்ளக் கூடாது.

எனவே ஜக்கிய மக்கள் சக்தி இப்படித்தான் நடந்து கொள்ளப் போகின்றது என்றால் தமிழ் மக்களுக்கும் ஜக்கிய மக்கள் சக்திக்கும் இடையேயான தொடர்பாடல் எதிர்காலத்தில் மிகவும் குறைவா இருக்கப் போகின்றது. எனவே கடந்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு தமிழ் மக்கள் கணிசமான வாக்குகளை அளித்துள்ளனர் என்பதை தமிழ் மக்கள் மறக்கக் கூடாது எனவும் தெரிவித்தார்.

மொட்டுக் கட்சியுடன் கூட்டு சேரும் சஜித் தரப்பு- கஜேந்திரகுமார் காட்டம். தமிழ் மக்கள் ஏற்க முடியாத மொட்டுக் கட்சியான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் சஜித் பிரேமதாசாவின் ஐக்கிய மக்கள் கட்சி இணைந்து உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பதற்காக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். எனவே ஐக்கிய மக்கள் சக்தி தொடர்பாக  தமிழ் மக்கள் ஆழமாக யோசிக்க அதேவேளை தெற்கில் இருக்க கூடிய சாதாரண மக்களின் விருப்பத்தை மீறுகின்ற, துஸ்பிரயோகம் செய்யும் வகையில் தமிழ் கட்சிகள் உடந்தையாக இருக்க வேண்டும் கூடாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பொ. கஜேந்திரகுமார் தெரிவித்தார்.மட்டக்களப்பு வவுணதீவு நரிப்புதோட்டம் பிரதேசத்தில் மே 18 முள்ளிவாய்கால் இன அழிப்பு நினைவேந்தல் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி வவுணதீவு பிரதேச அமைப்பாளர் செல்வகுமார் தலைமையில் இடம்பெற்றது. இதில் நா.உ. பொ.கஜேந்திரகுமார் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் பொதுமக்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு பொதுச்சுடர் ஏற்றி மலர் தூவி உயிர் நீத்தவர்களுக்கு 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர். இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே கஜேந்திரகுமார் இவ்வாறு தெரிவித்தார்.விசேடமாக உள்ளூராட்சி சபைகளில் கூட்டாக செயற்பட்டு ஆட்சி அமைப்பதற்காக எங்களிடம் முதல் எதிரணியில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. நடைபெறுவது கூட தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கே தமிழ் தேசிய பேரவைக்கே அழைப்பிதழ் எதுவும் விடுவிக்கப்படவில்லைஇதற்கு முன்னர் ரணில் விக்;கிரமசிங்கவின் ஏற்பாட்டில் பேச்சுவார்த்தை சுற்று நடைபெற்றது. ஆனால் இரண்டாம் கட்டமாக ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனை கட்சிக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றதுரணில் விக்கிரமசிங்க பேச்சுவார்த்தைகளை நடாத்த நாங்கள் அது தவறு என கருத்தை தெரிவித்தோம். உண்மையில் இரண்டாவது கட்சியாக தெற்கிலே ஐக்கிய மக்கள் சக்திக்கு மக்கள் வாக்களித்துள்ளனர். அதனடிப்படையில் தேசிய மக்கள் சக்தி விரும்பி செய்திருக்கின்றதே தவிர வேறு ஒரு தரப்பு அதற்கு முந்துவது பொருத்தமில்லை எங்கள் பார்வை.எனவே தேசிய மக்கள் சக்தி ஸ்ரீ லங்கா பொதுஜன பொரமுனை அழைத்திருப்பது எங்களுக்கு ஒரு பலத்த மாற்றம் ஏன் என்றால் தெற்கிலே ஒரு அறம் இல்லாத அரசியல் நடக்கின்றதா என்றவளுக்கு கேள்வி கேட்க வேண்டியுள்ளது, ரணில் விக்கிரமசிங்க மொட்டுக்கட்சியுடன் சேர்ந்து ஆட்சி அமைத்தபோது ஜக்கிய மக்கள் சத்தி, தேசிய மக்கள் சக்தி, எங்கள் போன்ற கட்சிகள் உறுதியா அதனை எதிர்த்தோம்.அந்த வகையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனை கட்சிகள் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையாக வைத்திருக்கும் அவ்வகையான பெரும்பான்மையை கொண்ட கட்சிகளுடன் தாங்கள் போய் ஜனாதிபதி பிரதமர் பதவியை ஏற்கமுடியாது என்ற வகையில் ஜக்கிய மக்கள் சக்தி அன்று பேசினார்.அவ்வாறு பேசியதற்கான முக்கிய காரணம் அந்தளவுக்கு மொட்டு தரப்பு ஊழல் செய்தது மக்களால் வெறுக்கப்பட வேண்டிய நிராகரிக்கப்பட வேண்டியவர்கள் அவர்களுக்கு எதிராக ஒழுக்க காற்று நடவடிக்கை பாயவேண்டும் என பேசியவர்கள் இன்று ஆட்சியமைப்பதற்காக அதே மொட்டுக்கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது எங்களைப் பொறுத்தவரையில் இந்த மக்கள் இன்னும் விரட்டி நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.அதேவேளை தேசிய மக்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் இன்று அவர்களது வாக்கு வங்கியில் அரைவாசி 6 மாதத்தில் குறைந்துள்ளது.எனவே அதற்கு மாற்றாக வளரக்கூடிய ஜக்கிய மக்கள் சக்தி எந்த விதமான அறவும் இல்லாமல் நடந்து கொள்ளும் வகையில் மொட்டுகட்சியை அழைத்து ஆட்சியமைக்க பேசுவது தென் இலங்கையில் இருக்க கூடிய மக்களது அரசியல் அபிலாசைகள் மிகப் பெரும் கேள்விக்குறியாக மாறும்.எனவே தமிழ் கட்சிகள் தெற்கில் இருக்க கூடிய சாதாரண மக்களின் விருப்பத்தை மீறுகின்ற வகையிலே அதனை துஸ்பிரயோகம் செய்யும் வகையில் நாங்கள் உடந்தையாக இருக்க கூடாது எங்களுக்கு ஒரு இனப்பிரச்சனை இருக்கு அது தீர்க்கப்படவேண்டும் அதற்கு தெற்கில் இருக்கின்ற சிங்கள மக்களின் ஆதரவு தேவை எனவே அவர்களுக்குத் தேவைப்படுகின்ற விடையங்களில் அவர்களின் நம்பிக்கையை இழக்க நேரிடும் வகையில் அவர்களுடைய விவகாரங்களில் தமிழ் மக்கள் நடந்து கொள்ளக் கூடாது.எனவே ஜக்கிய மக்கள் சக்தி இப்படித்தான் நடந்து கொள்ளப் போகின்றது என்றால் தமிழ் மக்களுக்கும் ஜக்கிய மக்கள் சக்திக்கும் இடையேயான தொடர்பாடல் எதிர்காலத்தில் மிகவும் குறைவா இருக்கப் போகின்றது. எனவே கடந்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு தமிழ் மக்கள் கணிசமான வாக்குகளை அளித்துள்ளனர் என்பதை தமிழ் மக்கள் மறக்கக் கூடாது எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement