• Sep 14 2025

குருக்கள்மடம் மனித புதைகுழி அகழ்வுப்பணிகள் அடுத்த வாரம் ஆரம்பம்

Chithra / Sep 14th 2025, 3:33 pm
image


மட்டக்களப்பு – குருக்கள்மடம் மனித புதைகுழியின் அகழ்வு நடவடிக்கைகளை அடுத்த வாரம் ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

குருக்கள்மடம் மனித புதைகுழி அகழ்வுப்பணிகளுக்காக 29 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் முனீர் முலாபர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் குறித்தஅகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

குறித்த அகழ்வுப் பணிகள் தொடர்பான ஆரம்பகட்ட நடவடிக்கைகளை ஆராய்வதற்காக கடந்த வியாழக்கிழமை (11) காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் அதிகாரிகள் விஜயம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குருக்கள்மடம் மனித புதைகுழி அகழ்வுப்பணிகள் அடுத்த வாரம் ஆரம்பம் மட்டக்களப்பு – குருக்கள்மடம் மனித புதைகுழியின் அகழ்வு நடவடிக்கைகளை அடுத்த வாரம் ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. குருக்கள்மடம் மனித புதைகுழி அகழ்வுப்பணிகளுக்காக 29 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் முனீர் முலாபர் தெரிவித்துள்ளார்.இதேவேளை களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் குறித்தஅகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். குறித்த அகழ்வுப் பணிகள் தொடர்பான ஆரம்பகட்ட நடவடிக்கைகளை ஆராய்வதற்காக கடந்த வியாழக்கிழமை (11) காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் அதிகாரிகள் விஜயம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement