• Apr 30 2026

காணிகளை அளவீடு செய்வதில் மாவட்ட செயலர் குறியாக இருக்கின்றார்! - தையிட்டி காணி உரிமையாளர் சாடல்!

Chithra / Apr 30th 2026, 12:06 pm
image

நாம் எமக்கிருந்த சந்தேகத்தையே யாழ் மாவட்ட செயலாளரிடம் கேட்டிருந்தோம். ஆனால் அவர் யாருடைய உந்துதலோ தெரியவில்லை எப்படியாவது காணிகளை நில அளவீடு செய்துவிட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்துகொண்டே எம்மிடம் திணிப்புக்களை மேற்கொண்டார் என சட்டவிரோதமாக கடப்பட்ட தையிட்டி காணி  உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.


நாம் அதற்கு இடம் கொடுக்காததனால் நில அளவீட்டுப் பணிகள் நிறுத்தப்பட்டதற்கு எம்மீது பழியை சுமத்திவிட்டு தப்பித்துக் கொள்ள முயற்சிக்கின்றார் என  காணி  உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.


யாழ் ஊடக அமையத்தில் நேற்று ஊடக சந்திப்பை முன்னெடுத்த தையிட்டி திஸ்ஸ விகாரை காணி உரிமையாளர்கள் மேலும் கூறுகையில் -


ஏற்கனவே திகதி அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில் நேற்றையதினம் (28) தையிட்டி காணி அளவிடும் பணிகள் முன்னெடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில் அழைக்கப்படாத குழுவினரும், கொழும்பிலிருந்து வரவழைக்கப்பட்டிருந்த நில அளவையியலாளர்களும் மட்டுமல்லாது தொல்பொருள் அதிகாரிகள், 

திஸ்ஸ விகாரை மற்றும் வெடுக்குநாறி விகாரைகளின் பிக்குகள் என சந்தேகத்துக்கிடமான பலர் பிரசன்னமாகி இருந்த நிலையில் குறித்த காணி அளவீட்டை எழுத்து மூலம் முறையான சட்டப் பிரகாரம் தருமாறு நாம் கோரினோம்.


ஆனால் முறையான கடிதத்தலைப்பற்ற ஒரு தாளில் பல்வேறு மயக்கங்களுடன் உறுதியான சட்ட ஏற்பாடற்ற கருத்துடன் ஒரு இணக்கப்பாட்டு சான்று எம்மிடம் மாவட்ட செயலாளரினால் காணிக்கப்பட்டது.


ஆனால் எமக்கு குறித்த அளவீட்டில் சந்தேகம் ஏற்பட்டதால்  நாம் அந்த சான்றில் வலுவான சொற்பதங்களை இணைக்க வேண்டும் என்றும், கடிதத் தலைப்பில் அதை எழுதி குறித்த அதிகாரிகளது ஒப்பத்துடன் வழங்க வேண்டும் என கோரினோம்.

 

இதற்கு மாவட்ட செயலர் ஒத்துழைக்கவில்லை. மாறாக வாய்வழியாக சொல்வது உத்தரவாதமாகும் என்றும் அதை ஏற்குமாறும் எம்மிடம் வற்புறுத்தினார்.இந்த நிலையில் தான் இரு தரப்பினரிடையே இழுபறி ஏற்பட்டது.


இதை தனக்கு சாதகமாக்கி எம்மீது பழிபோட்டு தப்பிக்க முயல்கின்றார் மாவட்ட செயலாளர் பிரதீபன்.


எமக்காண காணி அளவீட்டில் ஏன் உத்தரவாதம் தர இவ் அதிகாரிகள் பின்னடிக்கின்றனர் என எமக்கு சந்தேகம் இருக்கின்றது.


சிலவேளை, நிலஅளவீடு முடிந்ததன் பின்னர் ஏதாவது அபகரிப்புக்கள் நிகளும் சந்தர்ப்பம் இருக்கின்றதா என்று எமக்கு ஐயம் எழுத்துள்ளது. அதுமட்டுமல்லாது இந்த அதிகாரிகளுக்கும் அது தெரியும் என்பதால் பின்னாளில் தாம் தப்பித்துக் கொள்ளவும் சம நேரத்தில் காணிகளை அளக்க நாம் தான் விருப்புடன்  ஒப்புதல் வழங்கியதாக பிரச்சினைகள் ஏற்பட்டால் காட்டுவதற்கு முற்பட்டுகின்றனரா என்றும் பலமான கேள்விகள் எம்மிடம் இருக்கின்றது.


 வலி வடக்கின் தவிசாளரும் எம்மை மிரட்டி பணியவைக்கும் செயற்பாடுகளை செய்து வருகின்றார்.


அவர் யார், இந்த காணி விடயத்தில் அவருடைய பங்கு எத்தகையது என்பது எமக்கு தெரியும். ஆனாலும் பணம் கைமாறியதா என்ற சந்தேகம்  இன்று எமக்கு எழுந்துள்ளது.


இதேநேரம் பிரதேச சபையின் தவிசாளர் சுகிர்தன் எம்மை எதுவும் தெரியாதவர்கள் என்று எண்ணுகின்றார் என நினைக்க தோன்றுகின்றது.


ஏனென்றால் நாம் வருடக் கணக்கில் கோருகின்றோம் இந்த கட்டடத்தை சட்டவிரோதம் என்று அடையாளப்படுத்தி நோட்டீஸ் ஒட்டச்சொல்லி. ஆனால் அவர் எமக்கு ஒன்றையும், நடைமுறையில் ஒன்றையும் செய்து வருகின்றார்.


இவ்வாறானவர்கள் எமக்கு மக்கள் பிரதிநிதிகளாக தேவை இல்லை. அப்படியான பிரதேச சபையும் எமக்கு தேவை இல்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

காணிகளை அளவீடு செய்வதில் மாவட்ட செயலர் குறியாக இருக்கின்றார் - தையிட்டி காணி உரிமையாளர் சாடல் நாம் எமக்கிருந்த சந்தேகத்தையே யாழ் மாவட்ட செயலாளரிடம் கேட்டிருந்தோம். ஆனால் அவர் யாருடைய உந்துதலோ தெரியவில்லை எப்படியாவது காணிகளை நில அளவீடு செய்துவிட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்துகொண்டே எம்மிடம் திணிப்புக்களை மேற்கொண்டார் என சட்டவிரோதமாக கடப்பட்ட தையிட்டி காணி  உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.நாம் அதற்கு இடம் கொடுக்காததனால் நில அளவீட்டுப் பணிகள் நிறுத்தப்பட்டதற்கு எம்மீது பழியை சுமத்திவிட்டு தப்பித்துக் கொள்ள முயற்சிக்கின்றார் என  காணி  உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.யாழ் ஊடக அமையத்தில் நேற்று ஊடக சந்திப்பை முன்னெடுத்த தையிட்டி திஸ்ஸ விகாரை காணி உரிமையாளர்கள் மேலும் கூறுகையில் -ஏற்கனவே திகதி அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில் நேற்றையதினம் (28) தையிட்டி காணி அளவிடும் பணிகள் முன்னெடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில் அழைக்கப்படாத குழுவினரும், கொழும்பிலிருந்து வரவழைக்கப்பட்டிருந்த நில அளவையியலாளர்களும் மட்டுமல்லாது தொல்பொருள் அதிகாரிகள், திஸ்ஸ விகாரை மற்றும் வெடுக்குநாறி விகாரைகளின் பிக்குகள் என சந்தேகத்துக்கிடமான பலர் பிரசன்னமாகி இருந்த நிலையில் குறித்த காணி அளவீட்டை எழுத்து மூலம் முறையான சட்டப் பிரகாரம் தருமாறு நாம் கோரினோம்.ஆனால் முறையான கடிதத்தலைப்பற்ற ஒரு தாளில் பல்வேறு மயக்கங்களுடன் உறுதியான சட்ட ஏற்பாடற்ற கருத்துடன் ஒரு இணக்கப்பாட்டு சான்று எம்மிடம் மாவட்ட செயலாளரினால் காணிக்கப்பட்டது.ஆனால் எமக்கு குறித்த அளவீட்டில் சந்தேகம் ஏற்பட்டதால்  நாம் அந்த சான்றில் வலுவான சொற்பதங்களை இணைக்க வேண்டும் என்றும், கடிதத் தலைப்பில் அதை எழுதி குறித்த அதிகாரிகளது ஒப்பத்துடன் வழங்க வேண்டும் என கோரினோம். இதற்கு மாவட்ட செயலர் ஒத்துழைக்கவில்லை. மாறாக வாய்வழியாக சொல்வது உத்தரவாதமாகும் என்றும் அதை ஏற்குமாறும் எம்மிடம் வற்புறுத்தினார்.இந்த நிலையில் தான் இரு தரப்பினரிடையே இழுபறி ஏற்பட்டது.இதை தனக்கு சாதகமாக்கி எம்மீது பழிபோட்டு தப்பிக்க முயல்கின்றார் மாவட்ட செயலாளர் பிரதீபன்.எமக்காண காணி அளவீட்டில் ஏன் உத்தரவாதம் தர இவ் அதிகாரிகள் பின்னடிக்கின்றனர் என எமக்கு சந்தேகம் இருக்கின்றது.சிலவேளை, நிலஅளவீடு முடிந்ததன் பின்னர் ஏதாவது அபகரிப்புக்கள் நிகளும் சந்தர்ப்பம் இருக்கின்றதா என்று எமக்கு ஐயம் எழுத்துள்ளது. அதுமட்டுமல்லாது இந்த அதிகாரிகளுக்கும் அது தெரியும் என்பதால் பின்னாளில் தாம் தப்பித்துக் கொள்ளவும் சம நேரத்தில் காணிகளை அளக்க நாம் தான் விருப்புடன்  ஒப்புதல் வழங்கியதாக பிரச்சினைகள் ஏற்பட்டால் காட்டுவதற்கு முற்பட்டுகின்றனரா என்றும் பலமான கேள்விகள் எம்மிடம் இருக்கின்றது. வலி வடக்கின் தவிசாளரும் எம்மை மிரட்டி பணியவைக்கும் செயற்பாடுகளை செய்து வருகின்றார்.அவர் யார், இந்த காணி விடயத்தில் அவருடைய பங்கு எத்தகையது என்பது எமக்கு தெரியும். ஆனாலும் பணம் கைமாறியதா என்ற சந்தேகம்  இன்று எமக்கு எழுந்துள்ளது.இதேநேரம் பிரதேச சபையின் தவிசாளர் சுகிர்தன் எம்மை எதுவும் தெரியாதவர்கள் என்று எண்ணுகின்றார் என நினைக்க தோன்றுகின்றது.ஏனென்றால் நாம் வருடக் கணக்கில் கோருகின்றோம் இந்த கட்டடத்தை சட்டவிரோதம் என்று அடையாளப்படுத்தி நோட்டீஸ் ஒட்டச்சொல்லி. ஆனால் அவர் எமக்கு ஒன்றையும், நடைமுறையில் ஒன்றையும் செய்து வருகின்றார்.இவ்வாறானவர்கள் எமக்கு மக்கள் பிரதிநிதிகளாக தேவை இல்லை. அப்படியான பிரதேச சபையும் எமக்கு தேவை இல்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement