கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிணை வழங்கப்பட்டது.
கொழும்பு கோட்டை நீதிவான், இந்த அனுமதியை வழங்கியுள்ளார்.
இதன்படி அவர் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று (29) காலை அவர் வாக்குமூலம் அளிப்பதற்காக கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு சென்றிருந்த நிலையில், இவ்வாறு கைது செய்யப்பட்டார்.
அண்மையில் கொழும்பு - புறக்கோட்டையில் தனது வாகனத்தை போக்குவரத்து விதிமுறைகளை மீறி நிறுத்தியதோடு மட்டுமல்லாமல் பொலிஸாரின் கடமைக்கும் இடையூறு விளைவித்திருந்தார்.
இதன்போது, காரை குறித்த இடத்தில் ஏன் நிறுத்தினீர்கள் என பொலிஸார் வினவியதற்கு “காரை இங்கே நிறுத்தாமல், உங்கள் தலையிலா நிறுத்துவது” என அவமரியாதையாக பொலிஸ் அதிகாரியிடம் நடந்து கொண்டிருந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
அந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்காக கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு இன்று காலை சென்றிருந்த நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கைது செய்யப்பட்டார்.
இன்று பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகும் போது ஊடகவியலாளர் ஒருவர் 'தப்பே செய்யாத ஆள் பொலிஸ் நிலையத்திற்கு வந்துள்ளீர்கள்' என கேட்டதற்குஇ 'சரி சரி உங்கள் வேலையை பாருங்கள்' என சொல்லியபடி பொலிஸ் நிலையத்திற்குள் செல்லும் சம்பவமும் இடம்பெற்றுள்ளது.
அர்ச்சுனா எம்.பிக்கு பிணை வழங்கிய நீதிமன்றம் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிணை வழங்கப்பட்டது.கொழும்பு கோட்டை நீதிவான், இந்த அனுமதியை வழங்கியுள்ளார்.இதன்படி அவர் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.இன்று (29) காலை அவர் வாக்குமூலம் அளிப்பதற்காக கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு சென்றிருந்த நிலையில், இவ்வாறு கைது செய்யப்பட்டார். அண்மையில் கொழும்பு - புறக்கோட்டையில் தனது வாகனத்தை போக்குவரத்து விதிமுறைகளை மீறி நிறுத்தியதோடு மட்டுமல்லாமல் பொலிஸாரின் கடமைக்கும் இடையூறு விளைவித்திருந்தார். இதன்போது, காரை குறித்த இடத்தில் ஏன் நிறுத்தினீர்கள் என பொலிஸார் வினவியதற்கு “காரை இங்கே நிறுத்தாமல், உங்கள் தலையிலா நிறுத்துவது” என அவமரியாதையாக பொலிஸ் அதிகாரியிடம் நடந்து கொண்டிருந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்காக கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு இன்று காலை சென்றிருந்த நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கைது செய்யப்பட்டார்.இன்று பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகும் போது ஊடகவியலாளர் ஒருவர் 'தப்பே செய்யாத ஆள் பொலிஸ் நிலையத்திற்கு வந்துள்ளீர்கள்' என கேட்டதற்குஇ 'சரி சரி உங்கள் வேலையை பாருங்கள்' என சொல்லியபடி பொலிஸ் நிலையத்திற்குள் செல்லும் சம்பவமும் இடம்பெற்றுள்ளது.