• May 22 2026

பால் குடித்துவிட்டு உறங்கிய குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு! பிறந்து 3 மாதங்களில் நடந்த சோகம்

Chithra / Nov 6th 2025, 7:32 am
image

யாழில் பால் குடித்துவிட்டு உறங்கிய, 3 மாதங்கள் நிரம்பிய பெண் குழந்தை ஒன்று நேற்றுமுன்தினம்  உயிரிழந்துள்ளது. 


புன்னாலைக்கட்டுவன் தெற்கு, சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த சஜீவன் காஜத்திரி என்ற பெண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.


இது குறித்து மேலும் தெரியவருகையில்,


குறித்த குழந்தை 21.07.2025 அன்று பிறந்துள்ளது. 


குறித்த குழந்தை நேற்றுமுன்தினம்  பால் குடித்தவேளை விக்கல் ஏற்பட்டடுள்ளது. பின்னர் பிள்ளையை உறங்க வைத்துள்ளனர். இதன்பின் குழந்தை அசைவற்று காணப்பட்டுள்ளது.


இந்நிலையில் குழந்தையை, பெற்றோர் தனியார் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை, குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். 


பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு குழந்தையின் சடலத்தை கொண்டு சென்றுள்ளனர்.


குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். 


உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.


பால் குடித்துவிட்டு உறங்கிய குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு பிறந்து 3 மாதங்களில் நடந்த சோகம் யாழில் பால் குடித்துவிட்டு உறங்கிய, 3 மாதங்கள் நிரம்பிய பெண் குழந்தை ஒன்று நேற்றுமுன்தினம்  உயிரிழந்துள்ளது. புன்னாலைக்கட்டுவன் தெற்கு, சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த சஜீவன் காஜத்திரி என்ற பெண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.இது குறித்து மேலும் தெரியவருகையில்,குறித்த குழந்தை 21.07.2025 அன்று பிறந்துள்ளது. குறித்த குழந்தை நேற்றுமுன்தினம்  பால் குடித்தவேளை விக்கல் ஏற்பட்டடுள்ளது. பின்னர் பிள்ளையை உறங்க வைத்துள்ளனர். இதன்பின் குழந்தை அசைவற்று காணப்பட்டுள்ளது.இந்நிலையில் குழந்தையை, பெற்றோர் தனியார் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை, குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு குழந்தையின் சடலத்தை கொண்டு சென்றுள்ளனர்.குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement