• May 23 2026

காதலி பல நாட்களாக பேசாததால் காதலன் எடுத்த விபரீத முடிவு

Chithra / Nov 6th 2025, 11:36 am
image


மொனராகலை பொலிஸ் பிரிவில் வசிக்கும் இளைஞன் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு உயிர்மாய்த்துள்ளார்.  

இந்த சம்பவம்  நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

உயிரிழந்தவர், மொனராகலை - மதுருகெட்டிய பகுதியை சேர்ந்த 21 வயதான இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

போயா தினம் என்பதால் தாய் விகாரைக்கு சென்றுள்ளார். வீட்டில் யாரும் இல்லாத நிலையில் அருகிலுள்ள கடைக்குச் சென்று திரும்பிய தாத்தா, ​​பேரன் உயிரிழந்து கிடப்பதனை கண்டு அதிர்ச்சி அடைத்துள்ளார்.

உயிர்மாய்ப்பதற்கு முன் தனது தாய் மற்றும் தந்தைக்கு எழுதப்பட்ட கடிதம் ஒன்றும்,

அவரது பணப்பையில் அவரது காதலியின் புகைப்படமும் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

காதலி பல நாட்களாக தொலைபேசியில் பேசாததால் மனமுடைந்த இளைஞன் இவ்வாறு உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காதலி பல நாட்களாக பேசாததால் காதலன் எடுத்த விபரீத முடிவு மொனராகலை பொலிஸ் பிரிவில் வசிக்கும் இளைஞன் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு உயிர்மாய்த்துள்ளார்.  இந்த சம்பவம்  நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவர், மொனராகலை - மதுருகெட்டிய பகுதியை சேர்ந்த 21 வயதான இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.போயா தினம் என்பதால் தாய் விகாரைக்கு சென்றுள்ளார். வீட்டில் யாரும் இல்லாத நிலையில் அருகிலுள்ள கடைக்குச் சென்று திரும்பிய தாத்தா, ​​பேரன் உயிரிழந்து கிடப்பதனை கண்டு அதிர்ச்சி அடைத்துள்ளார்.உயிர்மாய்ப்பதற்கு முன் தனது தாய் மற்றும் தந்தைக்கு எழுதப்பட்ட கடிதம் ஒன்றும்,அவரது பணப்பையில் அவரது காதலியின் புகைப்படமும் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காதலி பல நாட்களாக தொலைபேசியில் பேசாததால் மனமுடைந்த இளைஞன் இவ்வாறு உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement