மாத்தறை - வெலிகம பகுதியில் துருக்கி நாட்டுப் பெண் ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் அவரிடமிருந்து பணமும் திருடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதுதொடர்பில் இரண்டு சுற்றுலா வழிகாட்டிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெலிகமவிலுள்ள விருந்தகம் ஒன்றில் தங்கியிருந்த 31 வயதுடைய துருக்கி நாட்டுப் பெண்ணே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இரண்டு சுற்றுலா வழிகாட்டிகளும் அந்தப் பெண்ணுடன் ஒரு மதுபானகத்துக்கு சென்று மது அருந்தியுள்ளனர்.
அதன் பின்னரே அவர்கள் அந்தப் பெண்ணை பாலியல் வன்புணர்வில் ஈடுபடுத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சுற்றுலா வழிகாட்டிகள், அந்தப் பெண்ணின் ஏடிஎம் அட்டையை பயன்படுத்தி அவரது கணக்கிலிருந்து 114,000 ரூபா பணத்தையும் திருடியுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் மருத்துவப் பரிசோதனைகளுக்காக மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையில் துருக்கி நாட்டு பெண்ணுக்கு நடந்த கொடூரம் மாத்தறை - வெலிகம பகுதியில் துருக்கி நாட்டுப் பெண் ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் அவரிடமிருந்து பணமும் திருடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதுதொடர்பில் இரண்டு சுற்றுலா வழிகாட்டிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.வெலிகமவிலுள்ள விருந்தகம் ஒன்றில் தங்கியிருந்த 31 வயதுடைய துருக்கி நாட்டுப் பெண்ணே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட இரண்டு சுற்றுலா வழிகாட்டிகளும் அந்தப் பெண்ணுடன் ஒரு மதுபானகத்துக்கு சென்று மது அருந்தியுள்ளனர்.அதன் பின்னரே அவர்கள் அந்தப் பெண்ணை பாலியல் வன்புணர்வில் ஈடுபடுத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த சுற்றுலா வழிகாட்டிகள், அந்தப் பெண்ணின் ஏடிஎம் அட்டையை பயன்படுத்தி அவரது கணக்கிலிருந்து 114,000 ரூபா பணத்தையும் திருடியுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.பாதிக்கப்பட்ட பெண் மருத்துவப் பரிசோதனைகளுக்காக மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.