• Oct 20 2026

மர்மமாக இருக்கும் அந்தக் கூட்டம்! இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னாள் அமைச்சர் ஆஜர்!

Chithra / Oct 20th 2026, 9:54 am
image


முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் இன்று (20) ஆஜராகியுள்ளார்.


குறித்த ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு அமையவே அவர் இன்று காலை அங்கு ஆஜராகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


ஜி.எல். பீரிஸ் வெளிவிவகார அமைச்சராகப் பதவி வகித்த காலப்பகுதியில் நடைபெற்ற கூட்டமொன்று தொடர்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைக்கு வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் அழைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


எனினும், குறித்த கூட்டம் தொடர்பான மேலதிக விவரங்களோ அல்லது விசாரணையின் தன்மையோ இதுவரை வெளியிடப்படவில்லை.

மர்மமாக இருக்கும் அந்தக் கூட்டம் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னாள் அமைச்சர் ஆஜர் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் இன்று (20) ஆஜராகியுள்ளார்.குறித்த ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு அமையவே அவர் இன்று காலை அங்கு ஆஜராகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.ஜி.எல். பீரிஸ் வெளிவிவகார அமைச்சராகப் பதவி வகித்த காலப்பகுதியில் நடைபெற்ற கூட்டமொன்று தொடர்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைக்கு வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் அழைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.எனினும், குறித்த கூட்டம் தொடர்பான மேலதிக விவரங்களோ அல்லது விசாரணையின் தன்மையோ இதுவரை வெளியிடப்படவில்லை.

Advertisement

Advertisement

Advertisement