• Jul 31 2026

பிராட் பீக்கில் பயங்கர பனிச்சரிவு - நிர்மல் புர்ஜா உட்பட 10 மலையேற்ற வீரர்கள் மாயம்

Chithra / Jul 31st 2026, 11:59 am
image


உலகில் உயரமான மலைகளில் ஒன்றான பாகிஸ்தானின் பிரோட் பீக் (Broad Peak) மலையில் ஏற்பட்ட பனிச்சரிவில், உலகப் புகழ்பெற்ற மலையேறு வீரர் நிர்மல் புர்ஜா உட்பட 10 மலையேறு வீரர்கள் காணாமல் போயிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.


பனிச்சரிவில் சிக்குண்டுள்ளவர்களை மீட்பதற்கான தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற இந்த பனிச்சரிவுக்குப் பின்னர், குறித்த 10 பேருடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக மலையேற்றப் பயண ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.


Seven Summit Treks நிறுவனத்தின் பயணப் பணிப்பாளர் சாங் தாவா ஷெர்பாவின் தகவலின்படி, காணாமல் போனவர்களில் ஐந்து நேபாள மலையேற்ற வீரர்களும் அடங்குகின்றனர்.


கேம்ப் 2 இலிருந்து கேம்ப் 3 நோக்கி உச்சியை அடையும் முயற்சிக்காக பயணித்துக் கொண்டிருந்தபோதே இந்த பனிச்சரிவு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


காணாமல் போனவர்களில் ரஷ்ய-அமெரிக்க பெண் மலையேற்ற வீரர் ஒருவர், நிர்மல் புர்ஜா மற்றும் Elite Exped நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு ஷெர்பா, ஓமன் நாட்டைச் சேர்ந்த மலையேற்ற வீரர் மற்றும் Seven Summit Treks நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு ஷெர்பாக்கள், சீன மலையேற்ற வீரர் ஒருவரும் Imagine Nepal நிறுவனத்தைச் சேர்ந்த ஷெர்பா ஒருவரும், மேலும் இரண்டு பாகிஸ்தான் வழிகாட்டிகளும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதனிடையே, நிர்மல் புர்ஜாவின் GPS  கண்காணிப்பு சாதனம் இன்னும் நகர்வைக் காட்டி வருவதாக  தெரிவிக்கப்படுகின்றது. 


பனிச்சரிவு ஏற்பட்ட பின்னரும் GPS சாதனத்தில் பதிவாகும் இருப்பிடம் தொடர்ந்து மாறி வருவதாகவும், எனினும் நிர்மல் புர்ஜா தொடர்பில் இதுவரை தகவல் கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


பனிச்சரிவைத் தொடர்ந்து காணாமல் போன மலையேற்ற வீரர்களைத் தேடும் மற்றும் மீட்கும் நடவடிக்கைகளுக்காக ஹெலிகொப்டர்கள் தயார் செய்யப்பட்டு வருவதாக பாகிஸ்தான் அல்பைன் கிளப் தெரிவித்துள்ளது.


பாகிஸ்தான் அரசாங்கம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து உடனடி தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், வானிலை மற்றும் செயற்பாட்டு நிலைமைகள் சாதகமாக இருந்தால் ஹெலிகொப்டர்கள் உள்ளிட்ட அனைத்து மீட்பு வளங்களையும் விரைவாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நிர்மல் புர்ஜா கடந்த ஜூலை 22ஆம் திகதி பாகிஸ்தானில் உள்ள காஷர்ப்ரும் II (Gasherbrum II) மலையின் உச்சியை அடைந்திருந்தார்.


இதன் மூலம் 8,000 மீற்றருக்கும் அதிகமான உயரம் கொண்ட மலைகளில் தனது 57ஆவது வெற்றிகரமான உச்சி ஏற்றத்தை அவர் நிறைவு செய்திருந்தார்.அவற்றில் 29 மலை உச்சிகளை மேலதிக ஒக்சிஜன் உதவியின்றி ஏறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


உலகின் 8,000 மீற்றருக்கும் அதிகமான 14 மலை உச்சிகளையும் மூன்று முறை ஏறுவது மற்றும் உலகின் ஏழு உயரமான சிகரங்களையும் மூன்று முறை ஏறுவது என்ற தனது ‘Hat-Trick Project’ இலக்கை நிறைவு செய்வதற்கு, சோ ஓயு (Cho Oyu) மலை உச்சி மட்டுமே நிர்மல் புர்ஜாவுக்கு எஞ்சியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


பிராட் பீக்கில் பயங்கர பனிச்சரிவு - நிர்மல் புர்ஜா உட்பட 10 மலையேற்ற வீரர்கள் மாயம் உலகில் உயரமான மலைகளில் ஒன்றான பாகிஸ்தானின் பிரோட் பீக் (Broad Peak) மலையில் ஏற்பட்ட பனிச்சரிவில், உலகப் புகழ்பெற்ற மலையேறு வீரர் நிர்மல் புர்ஜா உட்பட 10 மலையேறு வீரர்கள் காணாமல் போயிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.பனிச்சரிவில் சிக்குண்டுள்ளவர்களை மீட்பதற்கான தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற இந்த பனிச்சரிவுக்குப் பின்னர், குறித்த 10 பேருடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக மலையேற்றப் பயண ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.Seven Summit Treks நிறுவனத்தின் பயணப் பணிப்பாளர் சாங் தாவா ஷெர்பாவின் தகவலின்படி, காணாமல் போனவர்களில் ஐந்து நேபாள மலையேற்ற வீரர்களும் அடங்குகின்றனர்.கேம்ப் 2 இலிருந்து கேம்ப் 3 நோக்கி உச்சியை அடையும் முயற்சிக்காக பயணித்துக் கொண்டிருந்தபோதே இந்த பனிச்சரிவு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.காணாமல் போனவர்களில் ரஷ்ய-அமெரிக்க பெண் மலையேற்ற வீரர் ஒருவர், நிர்மல் புர்ஜா மற்றும் Elite Exped நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு ஷெர்பா, ஓமன் நாட்டைச் சேர்ந்த மலையேற்ற வீரர் மற்றும் Seven Summit Treks நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு ஷெர்பாக்கள், சீன மலையேற்ற வீரர் ஒருவரும் Imagine Nepal நிறுவனத்தைச் சேர்ந்த ஷெர்பா ஒருவரும், மேலும் இரண்டு பாகிஸ்தான் வழிகாட்டிகளும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனிடையே, நிர்மல் புர்ஜாவின் GPS  கண்காணிப்பு சாதனம் இன்னும் நகர்வைக் காட்டி வருவதாக  தெரிவிக்கப்படுகின்றது. பனிச்சரிவு ஏற்பட்ட பின்னரும் GPS சாதனத்தில் பதிவாகும் இருப்பிடம் தொடர்ந்து மாறி வருவதாகவும், எனினும் நிர்மல் புர்ஜா தொடர்பில் இதுவரை தகவல் கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.பனிச்சரிவைத் தொடர்ந்து காணாமல் போன மலையேற்ற வீரர்களைத் தேடும் மற்றும் மீட்கும் நடவடிக்கைகளுக்காக ஹெலிகொப்டர்கள் தயார் செய்யப்பட்டு வருவதாக பாகிஸ்தான் அல்பைன் கிளப் தெரிவித்துள்ளது.பாகிஸ்தான் அரசாங்கம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து உடனடி தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், வானிலை மற்றும் செயற்பாட்டு நிலைமைகள் சாதகமாக இருந்தால் ஹெலிகொப்டர்கள் உள்ளிட்ட அனைத்து மீட்பு வளங்களையும் விரைவாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.நிர்மல் புர்ஜா கடந்த ஜூலை 22ஆம் திகதி பாகிஸ்தானில் உள்ள காஷர்ப்ரும் II (Gasherbrum II) மலையின் உச்சியை அடைந்திருந்தார்.இதன் மூலம் 8,000 மீற்றருக்கும் அதிகமான உயரம் கொண்ட மலைகளில் தனது 57ஆவது வெற்றிகரமான உச்சி ஏற்றத்தை அவர் நிறைவு செய்திருந்தார்.அவற்றில் 29 மலை உச்சிகளை மேலதிக ஒக்சிஜன் உதவியின்றி ஏறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.உலகின் 8,000 மீற்றருக்கும் அதிகமான 14 மலை உச்சிகளையும் மூன்று முறை ஏறுவது மற்றும் உலகின் ஏழு உயரமான சிகரங்களையும் மூன்று முறை ஏறுவது என்ற தனது ‘Hat-Trick Project’ இலக்கை நிறைவு செய்வதற்கு, சோ ஓயு (Cho Oyu) மலை உச்சி மட்டுமே நிர்மல் புர்ஜாவுக்கு எஞ்சியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement