• Oct 15 2026

மயிலத்தமடுவில் மீண்டும் பதற்றம்! துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் திரும்பிய பசுக்கள்

Chithra / Oct 15th 2026, 3:42 pm
image


மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரைப் பகுதியில் மேய்ச்சலுக்காகச் சென்ற பசுக்கள் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் திரும்பியுள்ளதாக அப்பகுதி கால்நடைப் பண்ணையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.


நேற்று (14) இரவு மேய்ச்சலுக்காகச் சென்ற பசுக்கள், இன்று (15) காலை துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் திரும்பி வந்துள்ளதாகப் பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.


மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரைப் பிரச்சினை நீண்டகாலமாக நிரந்தரத் தீர்வின்றித் தொடர்ந்து வருகின்றது.


இதனால், பரம்பரை பரம்பரையாக அப்பகுதியில் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுவரும் பண்ணையாளர்கள், பல்வேறு சிரமங்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் மத்தியில் தமது வாழ்வாதாரத்தை முன்னெடுத்து வருகின்றனர்.


குறிப்பாக, மேய்ச்சல் தரைப் பகுதியில் நிலவும் காணிப் பிரச்சினைகள் மற்றும் கால்நடைகள் மீதான தாக்குதல்கள் காரணமாகத் தமது வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.


கடந்த மூன்று தினங்களுக்கு முன்னரே மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள், சட்டத்தரணிகள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் அரச உயர் அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் குறித்த பகுதிக்கு நேரடி விஜயம் மேற்கொண்டிருந்தனர்.


இதன்போது அப்பகுதியில் நிலவும் பிரச்சினைகளை நேரில் பார்வையிட்டதுடன், கால்நடைப் பண்ணையாளர்களிடமும் அவர்களது குறைகளைக் கேட்டறிந்திருந்தனர்.


இவ்வாறான நிலையில், மீண்டும் பசுக்கள் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை பண்ணையாளர்கள் மத்தியில் அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.


மேய்ச்சல் தரைப் பகுதிகளை வெளிமாவட்டங்களிலிருந்து வருபவர்கள் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து பயிர்ச்செய்கையில் ஈடுபடுவதாகவும், அவர்களாலேயே தமது கால்நடைகள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காக்கப்படுவதாகவும் பண்ணையாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.


எனவே, மேய்ச்சல் தரைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைப் பெற்றுத்தருவதுடன், தமது கால்நடைகளின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பண்ணையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

மயிலத்தமடுவில் மீண்டும் பதற்றம் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் திரும்பிய பசுக்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரைப் பகுதியில் மேய்ச்சலுக்காகச் சென்ற பசுக்கள் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் திரும்பியுள்ளதாக அப்பகுதி கால்நடைப் பண்ணையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.நேற்று (14) இரவு மேய்ச்சலுக்காகச் சென்ற பசுக்கள், இன்று (15) காலை துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் திரும்பி வந்துள்ளதாகப் பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரைப் பிரச்சினை நீண்டகாலமாக நிரந்தரத் தீர்வின்றித் தொடர்ந்து வருகின்றது.இதனால், பரம்பரை பரம்பரையாக அப்பகுதியில் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுவரும் பண்ணையாளர்கள், பல்வேறு சிரமங்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் மத்தியில் தமது வாழ்வாதாரத்தை முன்னெடுத்து வருகின்றனர்.குறிப்பாக, மேய்ச்சல் தரைப் பகுதியில் நிலவும் காணிப் பிரச்சினைகள் மற்றும் கால்நடைகள் மீதான தாக்குதல்கள் காரணமாகத் தமது வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.கடந்த மூன்று தினங்களுக்கு முன்னரே மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள், சட்டத்தரணிகள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் அரச உயர் அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் குறித்த பகுதிக்கு நேரடி விஜயம் மேற்கொண்டிருந்தனர்.இதன்போது அப்பகுதியில் நிலவும் பிரச்சினைகளை நேரில் பார்வையிட்டதுடன், கால்நடைப் பண்ணையாளர்களிடமும் அவர்களது குறைகளைக் கேட்டறிந்திருந்தனர்.இவ்வாறான நிலையில், மீண்டும் பசுக்கள் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை பண்ணையாளர்கள் மத்தியில் அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.மேய்ச்சல் தரைப் பகுதிகளை வெளிமாவட்டங்களிலிருந்து வருபவர்கள் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து பயிர்ச்செய்கையில் ஈடுபடுவதாகவும், அவர்களாலேயே தமது கால்நடைகள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காக்கப்படுவதாகவும் பண்ணையாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.எனவே, மேய்ச்சல் தரைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைப் பெற்றுத்தருவதுடன், தமது கால்நடைகளின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பண்ணையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Advertisement

Advertisement

Advertisement