ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் உயர்மட்ட குழு கூட்டம் இன்று வவுனியாவில் இடம் பெற்றதன் பின்னர் ஊடக சந்திப்பில் டொலோவின் சார்பில் கலந்து கொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கருணாகரன் ஊடக சந்திப்பில் கலந்து கொள்ள மறுப்பு தெரிவித்து வெளியேறி இருந்தார்.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் உயர்மட்ட குழு கூட்டம் இன்று வவுனியாவில் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்றது.
இதன்போது உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பிலும் தமிழ் தேசிய கட்சிகளுக்கு ஆதரவளிப்பது தொடர்பிலும் சுமார் 3 மணி நேர கலந்துரையாடல் இடம் பெற்றிருந்தது.
இதன் பின்னர் ஊடக சந்திப்பு இடம் பெற்று இருந்தது. இதன்போது ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் கட்சிகளின் முக்கியஸ்தர்கள் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட பொழுதிலும் டெலோவின் சார்பில் இன்றைய தினம் செல்வம் அடைக்கலநாதன் கலந்து கொள்ளாத பட்சத்தில் கருணாகரனை குறித்த ஊடக சந்திப்பில் கலந்து கொள்ளுமாறு கூறப்பட்டிருந்தது.
எனினும் அவர் மறுப்பு தெரிவித்து இருந்தார். தொடர்ந்தும் அவரை ஊடக சந்திப்பில் கலந்து கொள்ளுமாறு புளொட் தலைவர் த. சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோரால் வலியுறுத்தப்பட்ட போதிலும்,
இன்று எடுக்கப்பட்ட முடிவுகளில் சில மாற்றங்கள் நிகழக் கூடும் எனவும் ஆகவே தான் இந்த ஊடக சந்திப்பில் கலந்து கொள்ள முடியாது எனவும் கூட்ட மேசையிலிருந்து எழுந்து சென்றிருந்தார்.
இதன் காரணமாக இன்றைய கூட்ட முடிவுகள் சில வேளைகளில் மாற்றங்களை ஏற்படுத்துமா? என்கின்ற ஐயப்பாடு ஏற்பட்டுள்ளது.
இன்றைய கூட்டத்தில் புளொட் தலைவர் த. சித்தார்த்தன், ஈ பி ஆர் எல் எப் தலைவர் க. சுரேஸ் பிரேமச்சந்திரன், டெலோ சார்பில் கருணாகரன், ஜனநாயக போராளிகள் கட்சியின் சார்பில் செயலாளர் க. துளசி, சமத்துவக் சார்பில் மு. சந்திரகுமார், உட்பட உயர்மட்ட பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
ஊடக சந்திப்பை புறக்கணித்து வெளியேறிய டெலோ முக்கியஸ்தர்- முடிவுகளில் மாற்றம் வரலாம் என்றும் தெரிவிப்பு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் உயர்மட்ட குழு கூட்டம் இன்று வவுனியாவில் இடம் பெற்றதன் பின்னர் ஊடக சந்திப்பில் டொலோவின் சார்பில் கலந்து கொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கருணாகரன் ஊடக சந்திப்பில் கலந்து கொள்ள மறுப்பு தெரிவித்து வெளியேறி இருந்தார்.ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் உயர்மட்ட குழு கூட்டம் இன்று வவுனியாவில் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்றது. இதன்போது உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பிலும் தமிழ் தேசிய கட்சிகளுக்கு ஆதரவளிப்பது தொடர்பிலும் சுமார் 3 மணி நேர கலந்துரையாடல் இடம் பெற்றிருந்தது.இதன் பின்னர் ஊடக சந்திப்பு இடம் பெற்று இருந்தது. இதன்போது ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் கட்சிகளின் முக்கியஸ்தர்கள் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட பொழுதிலும் டெலோவின் சார்பில் இன்றைய தினம் செல்வம் அடைக்கலநாதன் கலந்து கொள்ளாத பட்சத்தில் கருணாகரனை குறித்த ஊடக சந்திப்பில் கலந்து கொள்ளுமாறு கூறப்பட்டிருந்தது.எனினும் அவர் மறுப்பு தெரிவித்து இருந்தார். தொடர்ந்தும் அவரை ஊடக சந்திப்பில் கலந்து கொள்ளுமாறு புளொட் தலைவர் த. சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோரால் வலியுறுத்தப்பட்ட போதிலும், இன்று எடுக்கப்பட்ட முடிவுகளில் சில மாற்றங்கள் நிகழக் கூடும் எனவும் ஆகவே தான் இந்த ஊடக சந்திப்பில் கலந்து கொள்ள முடியாது எனவும் கூட்ட மேசையிலிருந்து எழுந்து சென்றிருந்தார்.இதன் காரணமாக இன்றைய கூட்ட முடிவுகள் சில வேளைகளில் மாற்றங்களை ஏற்படுத்துமா என்கின்ற ஐயப்பாடு ஏற்பட்டுள்ளது.இன்றைய கூட்டத்தில் புளொட் தலைவர் த. சித்தார்த்தன், ஈ பி ஆர் எல் எப் தலைவர் க. சுரேஸ் பிரேமச்சந்திரன், டெலோ சார்பில் கருணாகரன், ஜனநாயக போராளிகள் கட்சியின் சார்பில் செயலாளர் க. துளசி, சமத்துவக் சார்பில் மு. சந்திரகுமார், உட்பட உயர்மட்ட பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.