தமிழ் முற்போக்கு கூட்டணி நேற்று (7) சனிக்கிழமை கொட்டகலை ஸ்ரீ முத்துவிநாயகர் ஆலய மண்டபத்தில் நடத்திய மலையக வாழ்வாதார மாநாட்டுத் தீர்மானங்கள் வருமாறு:
· தோட்டங்களில் தொழில் செய்தாலும் செய்யாவிட்டாலும் திருமணமான ஒவ்வொரு தம்பதியரும் ஒரு குடும்பமாகக் கருதப்பட்டு ஆகக் குறைந்தது 10 பேர்ச் காணியை சட்டபூர்வமாக உறுதி செய்ய வேண்டும்.
· இந்திய – இலங்கை வீடமைப்புத் திட்டத்தில் வழங்கப்படும் காணிகளில் தமது சொந்த நிதியில் வீடுகளை நிர்மாணிக்க விரும்புவோருக்கு முன்னுரிமை அடிப்படையில் நிர்வாக உதவிகளை வழங்க வேண்டும்.
· மலையக மக்களின் காணி உரிமையை களங்கப்படுத்தி, மண்சரிவு ஆபத்துகளை எதிர்நோக்கக் கூடிய தொடர்மாடி வீடுகளை அமைக்கும் அரச தரப்பு யோசனைகளை முற்றாகக் கைவிட வேண்டும்.
· தமிழ் முற்போக்கு கூட்டணி கடந்த வரவு செலவுத் திட்டத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பை ஆதரித்து வாக்களித்த நிலைப்பாட்டுக்கு அமைய, மலையகத் தமிழ் மக்களுக்கு சாதகமான அரசாங்கத்தின் நிலைப்பாடுகளுக்கு சாதகமாகவும், பாதகமான நிலைப்பாடுகளுக்கு எதிராகவும் செயற்படுதல்.
· பதிவு செய்யப்பட்ட பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதாகக் கூறப்படும் 1750 ரூபா நாட் சம்பளம் தோட்ட நிர்வாகங்களின் புதிய கெடுபிடிகளும், கொழுந்து நிறை அதிகரிப்பு போன்ற எந்த விதமான நிபந்தனைகளும் இன்றி வழங்கப்பட வேண்டும்.
· தோட்டங்களில் தொழில் செய்யும் அனைத்து தொழிலாளர்களும் பதிவு செய்யப்பட்டு 1750 ரூபா நாட்சம்பளம் வழங்கப்பட வேண்டும்.
· அரச பெருந்தோட்ட நிறுவனங்கள், தனியார் பெருந்தோட்ட நிறுவனங்கள், சிறு தோட்டங்கள், தனியார் தோட்டங்கள் ஆகிய நான்கு பிரிவுகளைச் சேர்ந்த அனைத்து தொழிலாளர்களுக்கும் ஒரே அளவில் 1750 ரூபா நாட் சம்பளம் வழங்கப்பட வேண்டும்.
· பெருந்தோட்ட உழைக்கும் மக்களின் வருமானத்துக்கு நிரந்தரத் தீர்வாக தோட்டத் துறை கூட்டுறவுத் துறையாக நிலைமாற்றம் செய்யப்பட்டு அதில் பங்காளர்களாக தொழிலாளர்கள் மாற்றப்பட வேண்டும்.
· தித்வா பேரளவில் சிக்குண்டு இன்னமும் பாதுகாப்பான தீர்வின்றி தவிக்கும் கண்டி, நுவரெலியா, பதுளை, மாத்தளை மாவட்ட பெருந்தோட்ட மலையக மக்களைனாட்டின் ஏணிய மக்களைப் போன்று தேசிய இடர் நிவாரண RE-BUILDING SRI LANKA மீள் கட்டுமான திட்டத்தில் உள்வாங்க வேண்டும்.
· நடைமுறையில் இருக்கும் அவசரகால விதிகளைப் பயன்படுத்தி, தோட்டங்களில் பாதுகாப்பான வீடமைப்புக் காணிகளைப் பெற்றுத் தந்து, அரசாங்கம் உறுதியளித்த 50 இலட்ச ரூப பெறுமதியான தித்வா வீடமைப்புத் திட்டத்தில் மலையகமும் உள்வாங்கப்பட வேண்டும்.
· தித்வா பேரழிவில் சிக்குண்ட பெருந்தோட்டங்களில் வசிக்கும் மலையக மக்களின் வீடமைப்பை, வழமையான இந்திய உதவி வீடமைப்புத் திட்டத்தில் முடக்கி, அவர்களை இலங்கைப் பிரஜைகளாக அல்லாமல் இந்தியப் பிரஜைகள் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தும் நடவடிக்கையை அரசாங்கம் உடனடியாகக் கைவிட வேண்டும்.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் “மலையக வாழ்வாதார மாநாட்டு” தீர்மானங்கள் தமிழ் முற்போக்கு கூட்டணி நேற்று (7) சனிக்கிழமை கொட்டகலை ஸ்ரீ முத்துவிநாயகர் ஆலய மண்டபத்தில் நடத்திய மலையக வாழ்வாதார மாநாட்டுத் தீர்மானங்கள் வருமாறு:· தோட்டங்களில் தொழில் செய்தாலும் செய்யாவிட்டாலும் திருமணமான ஒவ்வொரு தம்பதியரும் ஒரு குடும்பமாகக் கருதப்பட்டு ஆகக் குறைந்தது 10 பேர்ச் காணியை சட்டபூர்வமாக உறுதி செய்ய வேண்டும்.· இந்திய – இலங்கை வீடமைப்புத் திட்டத்தில் வழங்கப்படும் காணிகளில் தமது சொந்த நிதியில் வீடுகளை நிர்மாணிக்க விரும்புவோருக்கு முன்னுரிமை அடிப்படையில் நிர்வாக உதவிகளை வழங்க வேண்டும்.· மலையக மக்களின் காணி உரிமையை களங்கப்படுத்தி, மண்சரிவு ஆபத்துகளை எதிர்நோக்கக் கூடிய தொடர்மாடி வீடுகளை அமைக்கும் அரச தரப்பு யோசனைகளை முற்றாகக் கைவிட வேண்டும்.· தமிழ் முற்போக்கு கூட்டணி கடந்த வரவு செலவுத் திட்டத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பை ஆதரித்து வாக்களித்த நிலைப்பாட்டுக்கு அமைய, மலையகத் தமிழ் மக்களுக்கு சாதகமான அரசாங்கத்தின் நிலைப்பாடுகளுக்கு சாதகமாகவும், பாதகமான நிலைப்பாடுகளுக்கு எதிராகவும் செயற்படுதல்.· பதிவு செய்யப்பட்ட பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதாகக் கூறப்படும் 1750 ரூபா நாட் சம்பளம் தோட்ட நிர்வாகங்களின் புதிய கெடுபிடிகளும், கொழுந்து நிறை அதிகரிப்பு போன்ற எந்த விதமான நிபந்தனைகளும் இன்றி வழங்கப்பட வேண்டும்.· தோட்டங்களில் தொழில் செய்யும் அனைத்து தொழிலாளர்களும் பதிவு செய்யப்பட்டு 1750 ரூபா நாட்சம்பளம் வழங்கப்பட வேண்டும்.· அரச பெருந்தோட்ட நிறுவனங்கள், தனியார் பெருந்தோட்ட நிறுவனங்கள், சிறு தோட்டங்கள், தனியார் தோட்டங்கள் ஆகிய நான்கு பிரிவுகளைச் சேர்ந்த அனைத்து தொழிலாளர்களுக்கும் ஒரே அளவில் 1750 ரூபா நாட் சம்பளம் வழங்கப்பட வேண்டும்.· பெருந்தோட்ட உழைக்கும் மக்களின் வருமானத்துக்கு நிரந்தரத் தீர்வாக தோட்டத் துறை கூட்டுறவுத் துறையாக நிலைமாற்றம் செய்யப்பட்டு அதில் பங்காளர்களாக தொழிலாளர்கள் மாற்றப்பட வேண்டும்.· தித்வா பேரளவில் சிக்குண்டு இன்னமும் பாதுகாப்பான தீர்வின்றி தவிக்கும் கண்டி, நுவரெலியா, பதுளை, மாத்தளை மாவட்ட பெருந்தோட்ட மலையக மக்களைனாட்டின் ஏணிய மக்களைப் போன்று தேசிய இடர் நிவாரண RE-BUILDING SRI LANKA மீள் கட்டுமான திட்டத்தில் உள்வாங்க வேண்டும்.· நடைமுறையில் இருக்கும் அவசரகால விதிகளைப் பயன்படுத்தி, தோட்டங்களில் பாதுகாப்பான வீடமைப்புக் காணிகளைப் பெற்றுத் தந்து, அரசாங்கம் உறுதியளித்த 50 இலட்ச ரூப பெறுமதியான தித்வா வீடமைப்புத் திட்டத்தில் மலையகமும் உள்வாங்கப்பட வேண்டும்.· தித்வா பேரழிவில் சிக்குண்ட பெருந்தோட்டங்களில் வசிக்கும் மலையக மக்களின் வீடமைப்பை, வழமையான இந்திய உதவி வீடமைப்புத் திட்டத்தில் முடக்கி, அவர்களை இலங்கைப் பிரஜைகளாக அல்லாமல் இந்தியப் பிரஜைகள் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தும் நடவடிக்கையை அரசாங்கம் உடனடியாகக் கைவிட வேண்டும்.