• May 12 2025

சித்திரை பெளர்ணமி தினத்தில் திடீர் பரிசோதனை - மனித நுகர்விற்கு பொருத்தமற்ற உணவுகள் அழிப்பு

Thansita / May 12th 2025, 5:15 pm
image

அம்பகாமம் மம்மில் பிள்ளையார் ஆலய வருடாந்த சித்திரை பெளர்ணமி உற்சவத்தை முன்னிட்டு ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்ட உணவு கடைகள், சிற்றுண்டி கடைகள் மீது திடீர் பரிசோதனை  இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

 முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட அம்பகாமம் மம்மில் பிள்ளையார் ஆலய வருடாந்த சித்திரை பெளர்ணமி உற்சவம் இன்றையதினம் மிக சிறப்பான முறையில் இடம் பெற்றிருந்தது.

ஆலய வளாகத்தில் இருந்த உணவுக்கடைகள், ஐஸ்கிறீம் வாகனங்கள் மற்றும் சுண்டல் வண்டில்கள் போன்றவை மீது குறித்த பரிசோதனை நடவடிக்கை சுகாதரா பரிசோதகர்களால் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

குறித்த சோதனை நடவடிக்கையில் ஒட்டுசுட்டான் வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட மாங்குளம் பொதுச்சுகாதார பரிசோதகர்களான நதிருசன் அவர்களின் தலைமையில் பொதுச்சுகாதார பரிசோதகர்களான லோஜிதன், டிலக்சன் ஆகியோர்களினால் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அதன்போது மனிதநுகர்விற்கு பொருத்தமற்ற உணவுப்பொருட்கள் அழிக்கப்பட்டதோடு மற்றும் உணவு ஸ்தாபன உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததோடு பொதுச்சுகாதார பரிசோதகர்களினால் உணவு ஸ்தாபனங்கள் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார வழிமுறைகளும் எடுத்து கூறப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.

சித்திரை பெளர்ணமி தினத்தில் திடீர் பரிசோதனை - மனித நுகர்விற்கு பொருத்தமற்ற உணவுகள் அழிப்பு அம்பகாமம் மம்மில் பிள்ளையார் ஆலய வருடாந்த சித்திரை பெளர்ணமி உற்சவத்தை முன்னிட்டு ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்ட உணவு கடைகள், சிற்றுண்டி கடைகள் மீது திடீர் பரிசோதனை  இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட அம்பகாமம் மம்மில் பிள்ளையார் ஆலய வருடாந்த சித்திரை பெளர்ணமி உற்சவம் இன்றையதினம் மிக சிறப்பான முறையில் இடம் பெற்றிருந்தது.ஆலய வளாகத்தில் இருந்த உணவுக்கடைகள், ஐஸ்கிறீம் வாகனங்கள் மற்றும் சுண்டல் வண்டில்கள் போன்றவை மீது குறித்த பரிசோதனை நடவடிக்கை சுகாதரா பரிசோதகர்களால் மேற்கொள்ளப்பட்டிருந்தது.குறித்த சோதனை நடவடிக்கையில் ஒட்டுசுட்டான் வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட மாங்குளம் பொதுச்சுகாதார பரிசோதகர்களான நதிருசன் அவர்களின் தலைமையில் பொதுச்சுகாதார பரிசோதகர்களான லோஜிதன், டிலக்சன் ஆகியோர்களினால் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.அதன்போது மனிதநுகர்விற்கு பொருத்தமற்ற உணவுப்பொருட்கள் அழிக்கப்பட்டதோடு மற்றும் உணவு ஸ்தாபன உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததோடு பொதுச்சுகாதார பரிசோதகர்களினால் உணவு ஸ்தாபனங்கள் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார வழிமுறைகளும் எடுத்து கூறப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.

Advertisement

Advertisement

Advertisement