தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது.
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படம் வரும் மே 4-ஆம் திகதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
சூர்யாவுடன் த்ரிஷா கிருஷ்ணன், நட்டி சுப்ரமணியம், யோகி பாபு, ஸ்வாசிகா, ஷிவதா மற்றும் இந்திரன் என ஒரு பெரிய பட்டாளமே இதில் இணைந்துள்ளது.
படத்திற்கு சாய் அபியங்கர் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் இரண்டாவது பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளதாகக் கூறப்படுவது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்பிளிக்ஸ் (Netflix) நிறுவனம் சுமார் 35 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சூர்யாவின் ‘கருப்பு’ திரைப்பட வெளியீட்டு திகதி அறிவிப்பு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது.ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.இப்படம் வரும் மே 4-ஆம் திகதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.சூர்யாவுடன் த்ரிஷா கிருஷ்ணன், நட்டி சுப்ரமணியம், யோகி பாபு, ஸ்வாசிகா, ஷிவதா மற்றும் இந்திரன் என ஒரு பெரிய பட்டாளமே இதில் இணைந்துள்ளது.படத்திற்கு சாய் அபியங்கர் இசையமைத்துள்ளார்.இப்படத்தின் இரண்டாவது பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளதாகக் கூறப்படுவது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்பிளிக்ஸ் (Netflix) நிறுவனம் சுமார் 35 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.