• Oct 01 2026

கடையை உடைத்து தூக்கி வீசப்பட்ட சீனி பைகள் - முல்லைத்தீவில் அதிகாலை பதற்றம்! உயிரச்சத்தில் மக்கள்

Chithra / Sep 30th 2026, 12:47 pm
image


முல்லைத்தீவு கோம்பாவில் பகுதியில் அதிகாலை கிராமத்துக்குள் புகுந்த யானையால் மக்கள் மத்தியில் அச்சநிலை ஏற்பட்டுள்ளது.


இன்று (30.09.2026) அதிகாலை சுமார் 4 மணியளவில் கிராமத்துக்குள் புகுந்த யானை, வீட்டு காணிகளுக்குள் சென்று அட்டகாசத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.


இதன்போது, கோம்பாவில் நான்கு சந்தியில் அமைந்திருந்த கடையொன்றையும் யானை உடைத்து சேதப்படுத்தியுள்ளது.


கடைக்குள் இருந்த சீனி பைகளை எடுத்து சாப்பிட்ட யானை, பின்னர் அவற்றை வீதியில் தூக்கி வீசியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


அதன்பின்னர் துர்க்கா வீதி ஊடாக யானை அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.


அண்மைய நாட்களாக முல்லைத்தீவு மாவட்டத்தின் பல கிராமங்களுக்குள் யானைகள் தொடர்ச்சியாக புகுந்து வீடுகள் மற்றும் மக்களின் உடமைகளை சேதப்படுத்தி வருவதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.


இதனால் இரவு நேரங்களில் அச்சத்துடனேயே வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், யானைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தி கிராமங்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


குறிப்பாக, யானைகள் கிராமங்களுக்குள் நுழைவதைத் தடுக்கும் வகையில் யானை வேலி அமைத்துத் தருமாறும் அவர்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடையை உடைத்து தூக்கி வீசப்பட்ட சீனி பைகள் - முல்லைத்தீவில் அதிகாலை பதற்றம் உயிரச்சத்தில் மக்கள் முல்லைத்தீவு கோம்பாவில் பகுதியில் அதிகாலை கிராமத்துக்குள் புகுந்த யானையால் மக்கள் மத்தியில் அச்சநிலை ஏற்பட்டுள்ளது.இன்று (30.09.2026) அதிகாலை சுமார் 4 மணியளவில் கிராமத்துக்குள் புகுந்த யானை, வீட்டு காணிகளுக்குள் சென்று அட்டகாசத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.இதன்போது, கோம்பாவில் நான்கு சந்தியில் அமைந்திருந்த கடையொன்றையும் யானை உடைத்து சேதப்படுத்தியுள்ளது.கடைக்குள் இருந்த சீனி பைகளை எடுத்து சாப்பிட்ட யானை, பின்னர் அவற்றை வீதியில் தூக்கி வீசியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அதன்பின்னர் துர்க்கா வீதி ஊடாக யானை அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.அண்மைய நாட்களாக முல்லைத்தீவு மாவட்டத்தின் பல கிராமங்களுக்குள் யானைகள் தொடர்ச்சியாக புகுந்து வீடுகள் மற்றும் மக்களின் உடமைகளை சேதப்படுத்தி வருவதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.இதனால் இரவு நேரங்களில் அச்சத்துடனேயே வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், யானைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தி கிராமங்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.குறிப்பாக, யானைகள் கிராமங்களுக்குள் நுழைவதைத் தடுக்கும் வகையில் யானை வேலி அமைத்துத் தருமாறும் அவர்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement